போராட்டத்தில் ஒன்று சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை சங்கங்கள்

படுகொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் வேப்பிலாங்குளம் ஊராட்சி செயலாளர் சங்கரின் படுகொலையை கண்டித்து, ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

TNRDOA- கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சி செயலாளர்
திரு சங்கர் அவர்கள்,ஊராட்சி அலுவலகம் சென்று கொண்டிருக்கும் வேளையில்,சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்,

இச்செயலை கண்டித்து,
04.02.25 மாலை 5.30 மணிக்கு,நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை கட்டிட முன் வைத்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஊரக *வளர்ச்சித் துறை* ஊழியர்கள் அனைவரும், பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

மாவட்ட மையம்,TNRDOA

வன்மையாக கண்டிக்கிறோம்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலர் திரு.சங்கர் அவர்களை படுகொலை செய்த சமூக விரோதிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.இந்த படுகொலைக்கு காரணமான அனைவரையும்‌ உடனடியாக கைது செய்யவேண்டும்…..

 

மாநில மையம் ‌தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கம்

*கண்டன அறிக்கை*

*திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள வேப்பலான்குளம் ஊராட்சி செயலாளர் அன்பு சகோதரர் திரு. சங்கர் அவர்களை இன்று காலை 10 மணியளவில் பணிக்கு சென்ற போது மனிதநேயமற்ற கொலை வெறியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.*
*இந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியாக உள்ளது*.
*கொலை செய்யப்பட்ட கொலை வெறியர்களை உடனடியாக கைது செய்து தக்க தண்டனை வழங்க காவல்துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்*.
*என்ற கண்டன அறிக்கையை பதிவு செய்வதோடு சகோதரர் திரு. சங்கர் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் மிகுந்த வருத்தத்தையும் ஆறுதலையும் கண்ணீர் மல்க தெரிவித்துக் கொள்கிறோம்.

Also Read  கொட்டகுடி ஊராடசி - இராமநாதபுரம் மாவட்டம்

*ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம்*
*(மாநில மையம் 281/2010)*

கடும் கன்டனம்

திருநெல்வேலிமாவட்டம்.வள்ளியூர் ஒன்றியம்.ஊராட்சிசெயலாளர்.திரு.சங்கர்அவர்கள்சமூகவிரோதிகளால்படுகொலைசெய்யப்பட்டார்என்ற
செய்தி.அதிர்ச்சி
அளிக்கிறது.காலம்
தாழ்த்தாமல்.தமிழக
அரசுஉடனடியாக
சமூக விரோதிகளை
கைதுசெய்துகடும்
நடவடிக்கை எடுக்க
Tngots.மாநிலமையத்தின்சார்பில்கேட்டுக்கொள்கிறோம்.

கண்டன.பதிவில்
Tngots.மாநிலதலைவர்தருமபுரி.க.கிருஷ்ணன்