ஊராட்சி செயலாளர்கள் ஜாக்கிரதை – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே தலைப்பே எச்சரிக்கையாக உள்ளது.

ஆமாம் தலைவா…நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் வேப்பிலாங்குளம் ஊராட்சி செயாளர் சங்கர் என்பவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

என்ன காரணம் ஒற்றரே…

உண்மை காரணத்தை காவல்துறை இதுவரை சொல்லவில்லை. நான் விசாரித்த வகையில் அனுமதி இல்லாத ஒன்றிற்கு ரசீது போடவேண்டும் என மிரட்டல் இருந்ததாக சொல்கிறார்கள். 7ம் தேதி முதல்வரின் சுற்றுப்பயணம் முடிந்த பிறகு குற்றவாளி பற்றி செய்தி வரும் என தெரிகிறது.

என்ன காரணமாக இருந்தாலும் ஒருவரை கொலை செய்வது என்பது மிருகத்தனம் ஒற்றரே…

ஆம் தலைவா…28மாவட்டங்களில் தனி அலுவலர் காலம். இந்த இடங்களில் ஊராட்சி செயலாளரே மக்களிடம் நேரடி தொடர்பில் இருப்பர். தனி நபர் கோரிக்கைக்கு தீர்வு காண தாமதம் ஆனால் ஊராட்சி செயலாளர் மீதே கோபம் ஏற்படும்.

சரிதான் ஒற்றரே…மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் கூட பிரச்சனைகளை சமாளிப்பது இலகுவாக இருக்கும். இப்போது, தனி அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலர் சொல்வதை செயல்படுத்த வேண்டிய இடத்தில் தான் செயலாளர் உள்ளனர்.

ஆமாம் தலைவா…அதனால் ஊராட்சி செயலாளர் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய காலகட்டம் இது. போக்குவரத்து துறைபோல ஊரக வளர்ச்சி துறையும் மாறிவருகிறது.

Also Read  ஊராட்சி ஒன்றியங்களும்-பணிகளும்

என்ன சொல்கிறீர் ஒற்றரே…

போக்குவரத்து துறையில் ஆளும் கட.சி சங்க நிர்வாகிகளாக இருப்பவர்கள் வேலை செய்யாமலே  சம்பளம் வாங்குபவர். அதுபோல, ஊரக வளர்ச்சி துறையிலும் சில மாவட்டங்களில் சங்க நிர்வாகிகள் தனக்கான பணி செய்யாமல் அதிகாரிகளை சந்திப்பதையே வேலையாக வைத்துள்ளனர்.

எந்த மாவட்டத்தில்,யார் ஒற்றரே…

இந்த செய்தியை அவர்களும் படிப்பார்கள். அதன்பிறகும் அந்த நடவடிக்கை தொடர்தால் முழுவிவரங்களையும் சொல்கிறேன் தலைவா…

தேவகோட்டை பாஸ்கரன் பிடிஓ பற்றி தொடர்ந்து கவனித்து வாருங்கள் ஒற்றரே…

கவனித்து வருகிறேன்.விசாரனை சென்றுகொண்டிருப்பதாக தகவல்.என்ன முடிவு எடுக்கிறார்கள் என அறிந்து சொல்கிறேன் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.