குற்றவாளி கைது – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் நன்றி

நெல்லை கொலை குற்றவாளி கைது-மாநில தலைவர் நன்றி!

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..

திருவெல்வேலி மாவட்டம்,வள்ளியூர் ஒன்றியம்,வேப்பிலங்குளம் ஊராட்சி செயலர் திரு.S.சங்கர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதனை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் கடந்த 04.02.2025 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..இதனை தொடர்ந்து குற்றவாளி உடனடியாக அடையாளம் காணப்பட்டு இன்று கைது செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும்..

விரைந்து செயல்பட்டு கைது நடவடிக்கை எடுத்த மரியாதைக்குரிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும்,மரியாதைக்குரிய இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் அவர்களுக்கும், மரியாதைக்குரிய மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்களுக்கும்,மரியாதைக்குரிய ஊரகவளர்ச்சி உதவி இயக்குநர்(ஊ)அவர்களுக்கும்,காவல்துறை புலனாய்வுக்குழு அலுவலர்களுக்கும்.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சிறு விடுப்பு எடுத்து கலந்துகொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடங்கி ஊராட்சி செயலர் வரையிலான அனைத்துநிலை அலுவலர்களுக்கும்,பொறியியல் பிரிவை சார்ந்த அனைத்து நிலை அலுவலர்களுக்கும்,மாநிலம் முழுமைக்கும் கருப்புப்பட்டை அணிந்து எதிர்ப்பினை பதிவுசெய்த,ஒன்றிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை செய்த அனைத்து மாவட்ட உறவுகளுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்!

ஊரகவளர்ச்சித்துறையில் ஒரு பணியாளர் பாதிக்கப்பட்டவுடன் அரசு பணியாளர்கள் பாதுகாப்பு எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று ஒரே நேர்கோட்டில் மாற்று சங்கங்கள் ஒற்றுமையாக கலந்தது வரவேற்கதக்க நிகழ்வு ஆகும்.

Also Read  கங்கைகொண்டான் ஊராட்சி - திருநெல்வேலி

மேலும் குற்றவாளிக்கு உயர்தண்டனை பெற்றுத்தர அரசு நிர்வாகம் வேகமுடன் செயல்பட்டு அரசு பணியாளர்களுக்கான நம்பிக்கையை உயர்த்திடவும் வேண்டுகோள் விடுக்கிறோம்!*

மாநில மையம்
TNPSA-SRG-DGL-09-20