விவசாயம் காப்போம்
இந்தியா, கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் அழியுமானால் இந்தியாவும் அழியும் என்கிற காந்தியடிகளின் எச்சரிக்கைக்கு வாழ்வு கொடுத்தாக வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது .
தமிழகத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களால், பதினாறு ஆண்டுகால விடாமுயற்சியில் விவசாயப் பிரச்னை ஆராயப்பட்டு, முழு தீர்வு (திட்டமிடுதலில் இருந்து விற்பனை செய்துகொள்ளும் வரையிலான அனைத்து சேவைகளையும் கிராம அளவிலேயே விவசாயிகள் செய்துகொள்ளும்படியான தீர்வு) உருவாக்கப்பட்டது.
அது ஆந்திர மாநிலத்தில். ஒரு ஒன்றியத்தில் (முப்பது கிராமங்களில்) இரண்டு ஆண்டு காலம் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டப்பட்டது.
ஒட்டுமொத்த கிராம மேம்பாட்டுக்கு, குறிப்பாக விவசாயப் பிரச்னைக்கான தீர்வுக்கு வழிவகுக்கும் இந்தத் திட்டத்தை மாவட்ட அளவில் விரிவாக்கம் செய்வதற்கு, நாட்டின் (மாநில, மத்திய) உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியது.
ஓராண்டு தொடர் பரிசீலனைக்குப் பிறகு, இத்திட்டம் இந்திய விவசாயத்தின் திருப்புமுனையாக அமையும், புது விவசாய அணுகுமுறைக்கு வழிவகுக்கும்,
இதைவிட வேறென்ன வேண்டும்? இந்திய இளைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டுக்கு வேறு என்ன செய்ய வேஆண்டும்.
டிஜிட்டல்இந்தியாதிட்டத்தில்இந்தத்தீர்வைசெயல்படுத்தவேண்டி, மத்திய அரசிடம் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், பாரதப் பிரதமர் அவர்களிடம் இந்தத் தீர்வை கொண்டுசெல்ல விடாமல் சில சக்திகள் தடுக்கின்றன.
இதுதான் இந்தியாவின் நிலை. இதற்கு ஹார்வர்டு பல்கலைக் கழகம் என்ன தீர்வை தரும்? தர முடியும்? இந்தியாவின் விவசாயப் பிரச்னை, பல உலக நாடுகள் விரும்பும் ஒன்று. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழர்கள் வேண்டுமானால் கூறிக்கொண்டிருக்கலாம்.
இதற்கு தாங்கள் என்ன தீர்வு வைத்திருக்கின்றீர்கள்? அரசு செயல்படும் விதத்தை எப்படி மாற்றப்போகிறீர்கள் என்பதில்தான் கிராமப்புற, விவசாய மேம்பாட்டுக்கான தீர்வு உள்ளது.
(இது பழைய செய்தி…கொரொனா ஏற்படுத்திய தாக்கத்தால் உலகெங்கும் உணவு பொருட்களுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு வர உள்ளது. இனி…இந்திய பொருளாதாரமே விவசாயத்தை நம்பியே இருக்கப்போகிறது.)
விவாயத்தை இணையத்தோடு இணைக்கும் இவரின் முயற்சிக்கு அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஒத்துழைக்கவேண்டும்.
இவரின் முயற்சி வெற்றி பெற நமது இணையமும் கைகோர்த்து செயல்படும்.
இவரின் தற்போதைய வெற்றி பற்றி விரைவில் செய்தியாக்குவோம்.
தொடர்புக்கு:-
திருச்செல்வம் ராமு
(Mission IT-Rural, www.it-rural.com, 9840374266)