வறண்ட பூமியை வளமாக்கியது எப்படி – விவரிக்கிறார் திருச்செல்வம்ராமு

சிவகங்கை மாவட்டம்

வேப்பங்குளம் ஊராட்சி மட்டும் அல்ல…சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் வறண்ட பூமி.

வானம் பொய்த்தால் விவசாயம் கிடையாது. மரங்களை வெட்டி இயற்கையை அழித்ததால்மழையும்  ஏமாற்றிவிட்டது.

அரசாங்கத்திடமும்,அரசிடமும் போராடி தோல்விகண்ட திருச்செல்வம்ராமு தாய் மண்ணை நம்பி தனது திட்டத்தை வேப்பங்குளம் மக்களிடம் சொன்னார்.

மாற்றம்.

மழையே இல்லையே…விவசாயம் எப்படி பண்ணுவது என்றனர் மக்கள்.

எப்பவாவது பெய்யும் மழை நீரை சேகரிப்போம். அதற்கு அரசை எதிர்பார்க்காமல் நாமே களம் இறங்கவேண்டுமென திருச்செல்வம் கூற, ஊர்மக்களும் ஒத்துக்கொண்டனர..

இப்படி இருந்த பூமி

17 கிலோ மீட்டர்

நான்கு கண்மாய்களை சீர்படுத்துவது,நீர் வழித்தடம் 17 கிலோ மீட்டர் வரை பராமரிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

ஊர்மக்களே சேர்ந்து பல லட்ச ரூபாய் வசூலித்தனர். பணி ஆரம்பம் ஆனது.

மக்களின் மகத்தான ஒத்துழைப்போடு மிக விரைவாக பணி நடந்தது.

17 கிலோ மீட்டர் அளவு நீர்வரத்து வழியை சீர்செய்தனர். நான்கு. கண்மாய்கள் தூர்வாரப்பட்டது.

மாற்றத்திற்கு பிறகு

அதுவரை வறண்ட பூமியாக இருந்த வேப்பங்குளம் வளமான பூமி மாறும் நம்பிக்கை பிறந்தது.

பெய்த மழையில் நான்கு கண்மாய்களில் இரண்டு கண்மாய் மறுகால் போனது. நிலத்தடி நீர்மட்டம் குடுகிடுவென உயர்ந்தது.

Also Read  உதவி இயக்குநர்கள் உத்தரவு இடவேண்டும் - ஒற்றர் ஓலை

வேப்பங்குளத்தில் விவசாயப் பணி எப்படி ஆரம்பித்தது….

நினைத்தது எப்படி நடந்தது…தடைகளை எப்படி உடைத்தார்கள்…அடுத்த செய்தியில்…

இந்த தொடரின் முந்தைய செய்தி