வேப்பங்குளத்தில் விவசாய புரட்சி – விதை போட்ட திருச்செல்வம்

கணினிப் பொறியாளர் கனவு

திருச்செல்வம்ராமு என்ற கணினி பொறியாளரின் பல ஆண்டு விவசாயப் போராட்டம் விழிகளில் நீரை வரவழைக்கும்.

எல்லோரும் போல லட்சத்தில் வந்த சம்பளத்தோடு வாழ்வை கழிக்கும் யாதார்தத்தை விட்டு,லட்சியம் தேடி பயணப்பட்டார்.

விவசாயமே இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேர் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு பயணப்பட்டார்.

விவசாய இணையம்

இந்தியாவில் எந்த ஒரு விவசாயி இப்போது என்ன பயிர் வைத்துள்ளார்,அதற்கு எப்போது என்ன உரம் இட்டார்,எப்போது விளைச்சல் வரும் என ஒட்டுமொத்த விவரமும் ஒரே மென்பொருளில் வரும்படி உருவாக்கினார்.

ஆந்திர மாநிலத்தில் முப்பது கிராமங்களை ஒருங்கிணைத்து நடைமுறை படுத்தியும் காண்பித்தார்.

அதிகாரிகளின் இடமாற்றத்தால் அடுத்த நிலைக்கு செல்லமுடியவில்லை.

இந்த திட்டத்தை இந்திய அளவில் கொண்டு செல்ல முயன்றும் இயலாமல் போனது.

வேப்பங்குளம்

பிறரை நம்புவதை விட,பிறந்த மண்ணை நம்பலாம் என முடிவெடுத்தார்.

தன் அம்மா பிறந்த மண்ணான சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் உள்ள வேப்பங்குளத்தில் தனது கனவின் விதையை விதைத்தார்.

அந்த ஊரே அவருக்கு தோள் கொடுத்தது. அந்த ஊர் செய்த விவசாய புரட்சியை அடுத்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

பதினேழு கிலோ மீட்டர் நீர்வரத்து கால்வாயை செப்பனிட்டது.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியது.

சாகுபடியில் சாதித்தது….இப்படி படிப்படியாக வேப்பங்குளம் விவசாயத்தில் சாதித்ததை அடுத்து விரைவாக பார்ரப்போம்.

இதன் தொடர்சியை படிக்க கிளிக் செய்யவும்