தமிழக முதல்வர் உடனடி நிவாரணம்…!
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, சிறுகமணி மேற்கு கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் குமார் (வயது 46).
சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு முகாமில், கடந்த புதன்கிழமையன்று (13.5.2020)பணி முடிந்து இரவு குமார் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் மேம்பாலத்தில் வந்த போது, பின்னால் வந்த வேன் அதிபயங்கரமாக குமாரின் மீது மோதியது. இதில் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த துயரமான சம்பவத்தை அறிந்த திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு மருத்துவமனைக்கு சென்று.
குமாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
விபத்தில் சிக்கி பலியான கிராம நிர்வாகி குமாரின் மனைவி மற்றும் அவர்களின் மகள், மகனுக்கும்,
குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் ஈமசடங்கு நிதியாக ரூ.25 ஆயிரத்தை கலெக்டர் வழங்கினார். மேலும் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கொரோனா தொற்று நோய்த்தடுப்பில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுக்கு இறப்பு ஏற்படும்போது, அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.50 லட்சமும், வாரிசு அடிப்படையில் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, உரிய இழப்பீடும், வாரிசு வேலையும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு கலெக்டர், அரசுக்கு பரிந்துரை செய்து உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதன்படி விபத்தில் பலியான கிராம நிர்வாக அதிகாரி குமார் அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக 50 லட்ச ரூபாயும், அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்கிட, தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
இதற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம். அமைச்சர் பெருமக்களுக்கு மற்றும், அதிகாரிகளுக்கும் நன்றியை பதிவு செய்துள்ளது.
அதில் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க தலைவர் G.சுரேஷ் குறிப்பிட்டுள்ளதாவது:
அம்மா வழியில் ஆட்சி செய்து வரும் மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கும், மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்களுக்கும், மதிப்புக்குரிய வருவாய்த்துறை செயலாளர், நிர்வாக ஆணையர் அவர்களுக்கும் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும்,
எங்களது சங்கத்தின் சார்பாகவும், மறைந்த கிராம நிர்வாக அதிகாரியான குமார் அவர்களின் குடும்பத்தின் சார்பாகவும், தமிழக அரசுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.