இராஜபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக நிவாரண உதவி

கொரோனா

தமிழகமெங்கும் கொரோனா நிவாரண நிதியாக முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குவதை நாள்தோறும் செய்தியாக வருவதை பார்க்கிறோம்.

இதோ…தமிழ்நாடு கிராம நிருவாக அலுவர் சங்கத்தின் ராஜபாளையம் வட்டார சங்கத்தின் சார்பாக, 34ஆயிரத்துக்கும் அதிமான மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.

ராஐபாளையம் வட்டாரத்தில் வாழும் ஆதரவற்றோர்,முதியோர்களுக்கு அரிசி,பருப்பு அடங்கிய பொருட்களை வட்டார கிளை கழக தலைவர் சஞ்சீவிராஜ்,செயலாளர் வேலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் இணைந்து வழங்கினர்.

அரசு ஊழியர்களின் இந்த செயலை நமது இணையத்தின் சார்பாக பாராட்டுகிறோம்.

Also Read  விருது பெற்ற மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்