உள்ளாட்சி தேர்தல் – இதுதான் சட்டம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்

தேர்தல்

இடியாப்ப சிக்கலில் உள்ளாட்சி தேர்தல் என்ற நமது இணைய செய்தியை பற்றி மூத்த பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான தராசு ஷ்யாம் அவர்களிடம் பேசினோம்…

அப்போது அவர் கூறியதாவது….

அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு பஞ்சாயததுராஜ் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டு ஆகும். தனிபட்ட ஊராட்சி தலைவரின் தவறு நிரூபிக்கப்பட்டால் மாவட்ட ஆட்சித்தலைவர் அவரை பதவி நீக்கம் செய்யலாம்.அதற்கு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுபவர் எஞ்சிய காலத்திற்கு மட்டுமே பொறுப்பு வகிப்பர்.

ஆனால்…நடந்து முடிந்த ஒட்டுமொத்த தேர்தலையும் ரத்து செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரம் கிடையாது.முழுமையான சட்டப்பாதுகாப்பு உள்ளது.

ஆக…27 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தங்களது ஐந்தாண்டு காலத்தை நிச்சயம் பூர்த்தி செய்வர்.

தேர்தலோ தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள 27 மாவட்டங்களுக்கு இனி…ஊரக தேர்தல் இரண்டு கட்டமாகவும், சட்டமன்ற தேர்தல்,நாடாளுமன்ற தேர்தல் என  நான்கு முறை தேர்தல் நடைபெறும்.

மீதம் உள்ள மாவட்டங்களுக்கு நடைபெறப்போகும்  உள்ளாட்சி தேர்தலில் தேர்தெடுக்கப்படுபவர்களின் பதவிக்காலமும் ஐந்தாண்டு.

இனி…தமிழகத்தில் இரண்டு கட்டமாகத்தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெற முடியும் என்று உறுதியாக கூறினார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் கூறப்படாத அதிகார வகை ஊராட்சி தலைவருக்கு உண்டா?

Also Read  சர்வ அதிகாரம் கொண்ட பதவி

காலமாற்றத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதியதை அமல்படுத்தும் அதிகாரம் அரசிற்கா..ஊராட்சி மன்ற தலைவருக்கா?

இதுபோன்ற கேள்விகளுக்கு மூத்தபத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அளிக்கும் பதிலை அடுத்த பதிவில் பார்ப்போம்.