உள்ளாட்சி அமைச்சருக்கு சங்கத் தலைவர் சார்லஸ் ரெங்கசாமி உருக்கமான கோரிக்கை

வேண்டுகோள்

கொரனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றிடுக.

மாநில தலைவர் கோரிக்கை

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.சார்லஸ் ரெங்கசாமி அவர்கள் தமிழக அரசுக்கும்,உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

நடந்துமுடிந்த சட்டப்பேரவை மாநியக்கோரிக்கையில் மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்கள் கிராம ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை காவலர்களுக்கு 1000 ஊதிய உயர்வும்,மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு 1400 ஊதிய உயர்வும் வழங்கி அறிவிப்பு செய்தார்கள்.இவ்வறிவிப்பை தமிழக அரசு உடனடியாக அரசாணைகளாக வெளியிட வேண்டும்.

இதுதவிர…

ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்கிட வேண்டும்.

மாவட்ட/வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் 17 ஆண்டுகால பணிக்காலத்தை கணக்கில் கொண்டு அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.

கணினி உதவியாளர்களை உடனடியாக அரசுப்பணியாளர்களாக மாற்றி உத்தரவிட வேண்டும்.

மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

ஓய்வு பெற்ற ஊராட்சி செயலருக்கு மாத ஓய்வூதியம் 10000 வழங்கிட வேண்டும். உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை அளித்துள்ளார்.

Also Read  கொங்கு மண்டலத்திலா இப்படி!

மேலும் கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பணியாளர்களின் கடுமையான கொரனா ஒழிப்பு பணிகளை கணக்கில் கொண்டு இக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உத்தரவிட வேண்டும் எனவும் மிக மன உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

சார்லஸ் ரெங்கசாமி
சார்லஸ் ரெங்கசாமி