உள்ளாட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்-சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை

கோரிக்கை

உள்ளாட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிட வேண்டும்-

பணியாளர் சங்க மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை

கிராம ஊராட்சிகளில் மிக குறைந்த ஊதியத்தை பெற்றுவரும் ஊராட்சி செயலர்கள்,தூய்மை பணியாளர்கள்,தூய்மை காவலர்கள்,மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள் ஆகியோர் கொரனா தடுப்பு பணிகளில் இடைவிடாது ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களின் குடும்ப சூழ்நிலை கருதி தலா 25 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருள் தொகுப்பை தமிழக அரசு இலவசமாக வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வரையும்,மாண்புமிகு தமிழக துணை முதல்வரையும்,மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரித்துள்ளார்.

Also Read  தாமிரபரணி ஆற்றில் தீடீரென்று தோன்றிய சிவப்பு நிறம்..மக்கள் அச்சம்