தற்சார்பு
வல்லரசு நானென்று மார்பு தட்டிய பெரியண்ணன் அமெரிக்கா கதிகலங்கி நிற்கிறது.
உண்மையை உலகிற்கு சொல்லாமல் சீனா மறைக்கிறது.
வளரந்த நாடுகள் எல்லாம் அடுத்து எந்த நிலைக்கு செல்லும் என்பதை காலம் தான் சொல்லப்போகிறது.
அறிவியலின் எச்சமாய் வந்த அத்தனை தொழில்களும் முடமாகி முற்றிலும் முடங்கிப்போய் கிடக்கிறது.
கணினியே உலகம் என்ற கூட்டமெல்லாம்,அலுவலகம் விடுத்து வீட்டிற்குள் தஞ்சமாகிவிட்டது.
கிராமம்
இதோ…எப்போதும் போல சேவல் கூவும் முன்னே கிராம வாழ்க்கை விடிகிறது.
வல்லரசு மனிதர்களுக்கும் சேர்த்து சோறு போட சேற்றில் இறங்கும் விவசாய கடவுள்கள்.
தற்சார்பு பொருளாதாரமே இனியமான வாழ்விற்கு இதயம் என்பதை கொரொனா வைரஸ் நெற்றி பொட்டில் அடித்து சொல்லிவிட்டது.
இப்படியே மூன்று மாதம் கடந்தால், கம்யூட்டரில் உணவு உற்பத்தி செய்வது பற்றி ஐந்தறிவு கூட்டம் ஆராய்ச்சி செய்யலாம்.
இயற்கையோடு எங்கள் கிராமம் விவசாய உற்பத்தியை எப்போதும் போல இப்போதும் நடத்துகிறது.
பணம் தேடி பட்டணம் சென்ற கூட்டம்,உயிர் பயத்தால் ஊர் வந்து சேர்ந்தது.
வாங்க மக்கா…வந்து நம்ம விவசாயத்த, கிராம்ப்புற தொழில சேர்ந்து செய்யலாம்.
வீட்டிலே இருக்கும் நகர்புற உறவுகள் உயிரோடு வாழ, உணவை உற்பத்தி செய்ய சேற்றில் கால் விவசாயிகளின் உழைப்பிற்கு உரிய மரியாதையை இனிமேலாவது கொடுங்கள்.