ஊராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டடத்தில் மகளிர் குழு தலையீடு

சாதனை திட்டம்

மதிய உணவு திட்டம் என்றால் காமராஜர், தமிழ்நாடு பெயர் என்றால் அண்ணா, சொத்தில் பெண்களுக்கு பங்கு என்றால் கலைஞர்,சத்துணவு என்றால் எம்ஜிஆர், அம்மா உணவகம் என்றால் ஜெஜெ என்ற வரிசையில் தானும் இடம் பெற வேண்டும் என்று நினைத்தார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

அப்படி ஒரு சாதனை திட்டமாக பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நகர்புற பகுதிகளில் இந்த திட்டத்தால் பெரும்பயன் கிடைக்குமா என தெரியவில்லை.

ஆனால், கிராம பகுதி மாணவ,மாணவியர்களுக்கு இந்த திட்டம் சிறப்பானது. விவசாய வேலைகளுக்கு காலையிலேயே வயலுக்கு செல்லும் பொற்றோர்களால் உணவு சமைத்து வைத்து செல்லும் கடும் சிரமத்தை இந்த காலை உணவு திட்டம் போக்கி உள்ளது.

காலை,மதியம் என இருவேளைகள் மாணவர்கள் பள்ளியில் உணவருந்தால் கிராம்புற பெற்றோர்கள் இந்த திட்டத்தை வரவேற்கிறார்கள்.

மகளிர் குழுவும்,குழப்பமும்

ஊராட்சி பள்ளிகளில் இந்த திட்டமல ஆரம்பிக்கும் போது ஊராட்சி தலைவர் மற்றும் நிர்வாகம் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கியது. பல ஊராட்சி தலைவர்கள் காலை உணவு திட்டத்திற்கு தேவையான தட்டு,டம்ளர்களை தங்கள் செலவில் வாங்கிகொடுத்துள்ளனர்.

எந்த இடத்தில் சிக்கல் என்று தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சியின் தலைவர் சிவஆனந்த் நம்மிடம் கூறியது….

Also Read  கூடலூர் - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

சமீபத்தில் சென்னையில் நடந்த தமிழகம் முழுவதிலும் வந்திருந்த ஊராட்சி தலைவர் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. துறை செயலாளர் உட்பட உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்டபோது கூட காலை உணவு திட்டத்தில் தேவையில்லைமால் மகளிர் சுய உதவிக்குழு தலையீடுவதை பற்றி குற்றம் சாட்டி பேசினேன்.

திட்டம் ஆரம்பிக்கும் போது, அதிகாரிகள் ஊராட்சி தலைவர்களிடம் தான் சமையல் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்துதர கேட்டனர்.

இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தை ஆள் கிடைக்காத சூழ்நிலையில், மாணவ செல்வங்களின் நலன் கருதி நாங்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் பணியில் சேர்ந்தனர். அதன்பிறகே சம்பளம் ஐயாயிரம் ரூயாக உயர்த்தப்பட்டது.

ஆனால் இப்போது மகளீர் சுய உதவிக்குழு சார்பாக ஆட்களை தேர்வு செய்ய அதிகாரிகள் உத்தரவு இட்டுள்ளனர். அதுவும் சமையல் வேலைக்கு பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டுமாம்.

இதை பற்றி அந்த கூட்டத்தில் கூறிய பிறகே, ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு கல்வி தகுதி நிபந்தனை இல்லை என்றனர்.

இருந்தாலும்,ஊராட்சியில் நடைமுறையில் உள்ள திட்ட செயல்பாட்டில் தேவை இல்லாமல் மகளீர் குழுவை உள்நுழைப்பது எங்களின் உரிமையில் தலையிடும் செயல் என்றார் நம்மிடம்.

இந்த விசயத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி தான் சரியான முடிவை எடுக்க வேண்டும்.