அரசாணை என்றால் என்ன?

தமிழ்நாடு அரசு

மாநில அரசில் பல்வேறு துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறை சார்பாகவும் முக்கிய முடிவுகளை அரசின் உத்தரவாக வெளியிடப்படும் ஆணையே அரசாணை (GO) ஆகும்.

அந்தந்த துறைசார்பாக எடுப்பட்ட முடிவுகளை ஒரு கோப்பாக தயாரித்து துறை செயலாளரின் வழியாக, அந்த ஆணைக்கு தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்படும்.

குறிப்பாக, வேலைவாய்ப்பு தொடர்பானது என்றால் மனிதவளமேம்பாட்டுத் துறை, நிதித்துறை மற்றும் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டு உரிய ஆலோசனை பெறப்படும்.

இறுதி செய்யப்பட்ட ஆணையை அரசாணையாக ஆளுநரின் ஆனைப்படி என அரசின் முதன்மை செயலாளர்  வெளியிடுவார்.

ஒரே துறை சம்மந்தப்பட்ட அரசாணையை அந்த துறையின் செயலாளரே வெளியிடலாம். சில துறைகள் சம்மந்தப்பட்ட அரசாணையை அரசின் முதன்மை செயலாளர் வெளியிடுவார். அதி முக்கிய அரசாணையை தலைமை செயலாளரே ஆளுநரின் ஆனைப்படி என வெளியிடுவார்.

அனைத்து அரசாணையும் சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் முதலைமச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

Also Read  தலைவர் பதவி அதிகாரம் அல்ல..மக்கள் சேவை- உரக்க சொல்லும் பேராசிரியர்