செயல்வீரர்களின் கரங்களை வலிமைப்படுத்துவோம்… தலைவர்களை பாராட்டும் தருமபுரி க.கிருஷ்ணன்

இணைந்ததால் எல்லாம் வெற்றி

நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், பொதுமக்களின் ஆரோக்கியம் சிறப்பாக அல்லும், பகலும், சுத்தம் சுகாதாரப் பணிகளில் தங்களை அர்பணித்துக் கொண்டு, செயல் ஆற்றும் செயல் வீரர்களின். அடிப்படையான வாழ்வாதார கோரிக்கைகளை, நிறைவேற்றி அவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகிவரும்….

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம்,  தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க, செயல்வீரர்கள் மற்றும் செயல் தலைவர்களின்  அரும்பணியை பாராட்டி….

ஜான்போஸ்கோ பிரகாஷ்

தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தர்மபுரி
க.கிருஷ்ணன், பாராட்டி,  கூறியதாவது..

அரசுக்கு நல்ல பெயரை பெற்றுத் தர தன்னை வருத்தி உழைக்கும்.
ஊராட்சி பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளில்,

தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களின் மாத ஊதியமா ரூபாய் 250 என்று இருந்ததை மாற்றியமைத்து, அவர்களுக்கு

நல்ல ஊதிய உயர்வு பெற்றுத்தர ஆவண செய்தது முதல்,பணிநிரந்திரம், வாரிசுவேலை, கல்வி உதவித் தொகை, மற்றும் தொகுப்பு வீடுகள், மருத்துவ காப்பீடு, பணி ஓய்வுஊதியம், படித்த பணியாளர்களுக்கு பதவி உயர்வு,  மேலும் பணியாளர்களின் பணிகால உயிர் காக்கும் உபகரணங்கள் ஏதும்இன்றி பல ஆண்டுகளாக மக்களுக்கும். தமிழக அரசுக்கும் பணியாற்றும் இக்கட்டான பரிதாபகரமான நிலையில்.

Also Read  பொருளாதார இழப்பு-உடல்நலம் பாதிப்பு - தொடரும் மூன்றாம் நாள் போராட்டம்

கடந்த 30 ஆண்டுகால போராட்ட கோரிக்கை முழக்கத்தில்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம்.
ஊராட்சி செயளாளர்களுக்கு பணி நிரந்திரம் பெற்று உள்ளாட்சி துறையில் வரலாறு படைத்தது.

நம்முடைய பணியாளர்கள் அனைவரும் நமக்காக குரல் கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற வழிவகை செய்து கொடுத்த அந்த பெருந்தகை வீரர்களான….

தலைவர்கள்.திரு.சார்லஸ்ரெங்கசாமி,.
இளம்சிங்கம், ஜான் போஸ்கோ பிரகாஷ், ஆகியோர் தலைமையில் கோரிக்கை வெல்ல அவர்கள் கரத்தை வழுப்படுத்துவோம்…

திண்டுக்கல்லில் முதல்மாநாடு.
திருவண்ணாமலை வடக்கு மண்டல மாநாடு… என்று மிகப்பெரிய நம்பிக்கையான திருப்புமுனை நமது பணியாளர்களுக்கு பிறந்திருக்கிறது அவர்களால்….

12524,ஊராட்சிபணியாளர்கள் ஒன்றினைந்து கோரிக்கை வெல்ல உறுதியேற்போம்.

தற்போதுபெற்றிறுக்கிற ஊதியம் மட்டுமல்ல….

பணி நிரந்தரம் வேண்டி அனைத்து பணியாளர்கள் சங்கத்தில் ஒன்றிணைந்து சங்கமிப்போம்…

உள்ளாட்சித்துறை அமைச்சர் சந்திப்பு, உயர் அதிகாரிகள் சந்திப்பு என்று இடை விடாது உழைக்கும் அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் செயல்வீரர்களின் கரங்களை வலிமைப்படுத்துவோம்  என்று தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்க மாநில தலைவர் தருமபுரி.க.கிருஷ்ணன் தனது வாழ்த்துரை கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி க.கிருஷ்ணன்
தர்மபுரி க.கிருஷ்ணன்

இவர்கள் அனைவரும் இணைந்து அனைத்து கோரிக்கைகளையும் வென்றெடுக்க என்றும் நமது இணையமும் தோள் கொடுக்கும்.

Also Read  ஊராட்சிகளில் ஆன்லைனில் கட்டிட அனுமதி பெற முதலில் செய்ய வேண்டியது?