கொரோனா தடுப்பு… உலகம்பட்டு சுறுசுறுப்பு

திருவண்ணாமலை மாவட்டம்

கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள்.. நாடுமுழுவதும் பரபரப்பாக செயல்பட்டு வருவது  அனைவரும் அறிந்த செய்திகளில் ஒன்று….

கொரோனா எதிர்ப்பு யுத்தத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் தீவிரமாக நகர சுத்தி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்…

 ஊராட்சி தலைவி
ஊராட்சி தலைவி

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள்….

இவர்கள் அல்லும் பகலும் அயராது கொரோனா எதிர்ப்பு பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உலகம்பட்டு கிராம ஊராட்சி..

இங்கு சுமார் ஆயிரத்து 800 மக்கள் வசிக்கும் உலகம்பட்டு கிராம ஊராட்சியில் 6 வார்டுகள் உள்ளன.

இங்கு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையாக மருந்து தெளித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை தீவிரமாக நடைபெற்று வருகிறது…

உலகம்பட்டு கிராம ஊராட்சி பகுதியை நாள்தோறும் தீவிரமாக கவனிப்பதில், ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் அதன் தலைவி வேல்விழி அறி. அவர்களும் துணைத் தலைவி திலகாமுத்துக்குமரன், ஆகியோர் பெரும் பங்காற்றி வருகிறார்கள்…

Also Read  நெடுங்கல் ஊராட்சி - திருவண்ணாமலை மாவட்டம்