சுட்டெரிக்கும் வெயிலில் ஊராட்சி செயலாளர்கள்

பாவம் பெண்கள்

அதிகபட்ச வெயிலின் தாக்கம் உள்ள நிலையில் தங்களின் உரிமைக்காக போராடிவரும் ஊராட்சி செயலாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் நிலையை கண்டால் கண்ணீர் வருகிறது.

குளுகுளு காரிலும்,அறைகளிலும் காலத்தை கழிக்கும் அமைச்சருக்கும்,உயர் அதிகாரிகளுக்கும் இவர்களின் நிலையை பற்றி சிறிதும் கவலை இல்லை போலும்.

கொழுப்பெடுத்து கள்ள சாராயம் குடித்து உயிரை விட்டவர்களை பார்ப்பதற்கு விழுப்புரம் விரைகிறார் முதல்வர். அவரை பின்தொடர்ந்து அனைத்து கட்சியினரும் செல்லலாம். கொழுத்தும் வெயிலில் போராடும் 10 ஆயிரம் ஊராட்சி செயலாளர்களின் பக்கம் பார்வையை திருப்புவதற்கு மனம் வரவில்லை.

இன்னும் எட்டு மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், கிராம மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ள ஊராட்சி செயலாளர்களை புறக்கணித்தால், வாக்குகளின் போக்கு கூட மாறும் சூழல் ஏற்படலாம் என்பதே சைதாப்பேட்டையில் நாம் கண்டதின் பொருளாக உள்ளது.

Also Read  எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் தமிழ்புத்தாண்டு வாழ்த்து