உள்ளாட்சியில் அமைப்பில் பெண்தலைவர்களும்,செயல்பாடுகளும்

கள நிலவரம்

பெண் தலைவர்கள்

உள்ளாட்சி அமைப்புகளில் முதல்முறையாக 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, கிராம நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்த தேர்தலாக 2019 உள்ளாட்சி தேர்தல் அமைந்து விட்டது.

2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். முன்னதாக 33 சதவீத இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தன.

மூன்று ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு தேர்தல் நடைபெறுவதால், 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம், கர்நாடகா உள்ளிட்ட 20 மாநிலங்களில் பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

தமிழகத்தில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு, முதல்முறையாக இந்த தேர்தலில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் பங்கேற்றனர்.

இந்த புதிய இட ஒதுக்கீடு கிராமத்தின் முன்னேற்றத்திற்கு உதவுமா….? பெண் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட வாய்ப்புள்ளதா….? என தெரிந்து கொள்ள தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்ற  பெண்களிடம் நமது “tn பஞ்சாயத்து செய்திகள்”குழு  நேர்காணலில் கேட்டறிந்து வருகிறது…!

பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது நல்ல முடிவுதான்.

ஆனால் உடனடியாக மாற்றங்களை பார்க்கமுடியாது. பல கிராமங்களில் பெண் தலைவர், அவர்களின் கணவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பெயர் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை.

Also Read  என்னென்ன செய்யலாம் பஞ்சாயத்து தலைவர்

ஊராட்சிக்கு வரும் நிதியை எந்த திட்டங்களுக்கு செலவிடவேண்டும் என தேர்வான பெண் தலைவரின் கணவர்தான் தீர்மானிக்கிறார். பெண் கையொப்பம் மட்டும் இடுகிறார்.

இதுபோன்ற நிலை தொடரக்கூடாது. இவ்வளவு ஏன் நமக்கு பேட்டியளிக்க கூட கணவனின் அனுமதியை எதிர்பார்த்து எதிர்பார்த்துத்தான் பேட்டி தருகிறார்கள்.

சில பெண் தலைவர்கள் இதுகுறித்து  நம்மிடம் கூறும்போது “என் கணவர் இருக்கும் போது நான் சுயேச்சையாக செயல்படக்கூடாது.

உங்கள் மனைவி உங்களுக்குத் தெரியாமல் ஒரு காரியம் செய்தால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா…? அப்படித்தான் எல்லாம் என்றார்கள்.

   நாம் செய்தி நாகரீகம் கருதி எதிர்வாதம் பேசாமல் இருந்துவிடுகிறோம்…!

சில இடங்களில் ஒரு சில கணவர்மார்கள் நம்மிடம் கூறும்போது “எல்லா வேலைகளையும் எல்லா நேரத்திலும் பெண்களால் செய்துவிடமுடியாது.

எனவேதான் அவருக்கு அவரின் கணவரோ, பாதுகாவலரோ அல்லது சகோதரரோ இருந்து உதவி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

இது புரியாமல் தெரியாமல் பெண்கள் பதவியில் ஆண்களின் ஆதிக்கம் என்று பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் குற்றம் கூறுவது சரியல்ல என்று தனது மனக்குமுறல் களை நம்மிடம் பதிவு செய்தார்கள்…!

நாம் சென்று பார்த்த அளவில் பல பெண் தலைவர்கள், ஆண்களின் அதாவது கணவன்மார்களின் நிர்ப்பந்தத்தால் காரசமாக அல்லது வற்புறுத்தி தான் ஊராட்சி மன்ற தலைவர்களாக பொறுப்பு ஏற்றுள்ளனர்.

Also Read  பஞ்சாயத்து-கிராமசபை ௯ட்டம்

பல இடங்களில் பெண்கள் நம்மிடம் பேசவே வெட்கப்பட்டார்கள், தயக்க பட்டார்கள், மேலும் ஊராட்சி மன்ற நிர்வாக நிலைப்பாடுகள் பற்றி பெரிய அளவில் விவரம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

இனிவரும் காலகட்டத்தில் அரசு தரும் பயிற்சியின் வழியாக ஒருவேளை முன்னேற்றம் உருவாகும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

இவர்களைப் போன்று ஊராட்சி நிர்வாகம் பற்றி சரியான புரிதல் இல்லாதவர்கள் நமது “tn பஞ்சாயத்து செய்திகளை”  தொடர்ந்து பார்க்கும் போது தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்…!

காரணம் உள்ளாட்சி அமைப்புகளில் செயல்பாடுகள், அதிகார வரம்புகள், மற்றும் பொருளாதார மேம்பாடுகள், பற்றி நன்கு அறிந்த ஆய்வாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் போன்றவர்கள் பல விழிப்புணர்வு பதிவுகளை நமது சேனலில் பதிவு செய்து வருகிறார்கள்….!!

தொகுப்பு:-

சங்கரமூர்த்தி 7373141119