கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஒன்றான நீலாம்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவி சாவித்திரி அவர்கள்,
நமது பஞ்சாயத்து செய்திகள் சேனல் சிறப்புடன் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவர் நமக்களித்த சிறப்பு நேர்காணலில் கூறியதாவது…
எங்கள் பகுதிகளில் செய்யவேண்டிய பொறுப்பான கடமைகள் அதிகம் உள்ளது அதை சிறப்புடன் செய்வதற்காகவே எனது கணவர் சண்முகத்தின் சம்மதத்துடன்,
இந்தப் பதவிக்கு நான் வந்துள்ளேன்.
எங்கள் பகுதியில் வி.வி.ஐ.பி.கள் அதிகம் பயணம் செல்லக்கூடிய பிரதான சாலையான அவிநாசி ரோடு உள்ளது.
மேலும் மற்ற மாநிலங்களுக்கு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய இணைப்பு சாலையும் இங்குதான் உள்ளது.
அதை நன்கு பராமரித்து சிறப்புடன் போக்குவரத்து வசதிகளை செய்துதர முற்படுகிறோம்.
மேலும் எங்கள் பகுதியில் உள்ள அடிப்படை சுகாதாரமான கழிவு நீர் பிரச்சனை மற்றும் சாக்கடை நீர் தேக்க பிரச்சனை இவைகளை சீரிய முறையில் கவனம் செலுத்தி சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் முன்மாதிரியான ஊராட்சியாக உருவாக்க நாங்கள்எங்களதுவார்டுஉறுப்பினர்களுடன் கலந்து வெற்றி பெற கரமாக செயல்பட திட்டமிட்டு உள்ளோம்.
மேலும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செவ்வன நிறைவேற்ற அரும்பாடு பட உறுதி பூண்டுள்ளோம் என்று சாவித்திரி சண்முகம் நம்மிடம் தெரிவித்துள்ளார்.
மக்கள் சேவை
டாக்டர் சாவித்திரி “இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி”யில் பேராசிரியராக பணியில் இருந்தவர்.
பொதுப் பணிக்காக பதவியை ராஜினாமா செய்து வந்து உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரது கணவர் சண்முகம் அவரது குடும்பம் அனைத்துமே
மக்கள் சேவையே மகேசன் சேவை என்று
பொதுப்பணி செய்வதிலும் சமூக சேவையிலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது…!