கொங்கு மண்டலத்திலா இப்படி!

பல்லிளிக்கும் பத்திரிகை தர்மம்

நமது நாட்டின் ஜனநாயக தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத்துறை,

படு கேவலமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் அவமானமாக இருக்கிறது….!

சமீபகாலமாக  நீதிமன்றங்களில் போலி பத்திரிக்கையாளர்களை களையவேண்டும்,
பத்திரிகையாளர்களை அடையாளம் காணவேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
காவல்துறையும்  போலிகளை தேடி துப்பறிந்து வருகிறது.

  இது மக்களிடையே மிகவும் கேவலமான ஒரு மனநிலைக்கு கொண்டு சென்று உள்ளது என்பதை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்தோம்…!

   நமது பஞ்சாயத்து செய்திகள் காக செய்தி சேகரிக்க சென்ற இடமெல்லாம் பத்திரிக்கை என்றவுடன் பதறி அடித்து ஓடினர் சிலர், ஒரு சிலர் நம்மை வைத்துக்கொண்டே மற்றவர்களிடம் பத்திரிக்கையாளர்களை பிச்சைக்காரா்கள் என்றும், நிருபர்களின் தரித்திரம் மற்றும் அவர்களின் நடவடிக்கை, யோகியதை, பற்றி மிகவும் கேவலமாக அருவருக்கத்தக்க முறையில் பேசியது, நமது மனதை மிகவும் வேதனைப் படுத்தியது.

    குறிப்பாக கோவை மாவட்டத்தில் இந்த தரித்திரஅவலநிலை மிகவும் அதிகமாகவே இருக்கிறது….!

அஞ்சுக்கும், பத்துக்கும், அலையும் தரித்திரம் பிடித்த பிச்சைக்கார பத்திரிகையாளர்கள் கோவையில் தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று பொதுமக்கள் பேசுவது மிகவும் அசிங்கமாக உள்ளது….!

  இந்த அவலநிலை ஜனநாயகத்திற்கு ஒரு ஆபத்தான சூழல்.

Also Read  புளியம்பட்டி ஊராட்சி - தருமபுரி மாவட்டம்

காரணம் உள்ளதை உள்ளபடி உழைக்க வேண்டியது பத்திரிகை தர்மம்.

அந்த தர்மம் அதர்ம்மமாக  மாறிவிட்டது.
இது காலத்தின் கோலம், இதனால் நேர்மையாக உழைக்கும் பத்திரிக்கையை  கூட மிக கேவலமாக சந்தேகக் கண் கொண்டு தான் பார்க்க வேண்டியுள்ளது என்று பொது மக்கள் கூறுகிறார்கள்.

   பொதுவாகவே பத்திரிகைகள் எப்போதுமே செய்திகளை முன்னுக்குப்பின் முரணாக திரித்து தான் எழுதுகிறார்கள்…. என்ற ஒரு சந்தேக விவாதம் என்றுமே வாசகர் மத்தியில் உண்டு.

அது உண்மைதான் என்று நிரூபிப்பது போல் உள்ளது, கோவை பத்திரிக்கையாளர்களின் அட்டகாசம்..!

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ஆனால் பத்திரிக்கையாளர்களுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு செருப்பு என்று தான் நாம் கூற முடியும்..!

காக்கிச்சட்டை என்றாலே, லஞ்சம் வாங்குபவர்கள் என்று ஒரு முத்திரை குத்தப்பட்டு விட்டது.

அது போலவே தான் இன்று பத்திரிகையாளர்களுக்கும் முத்திரை குத்தி வருகிறார்கள் பொதுமக்கள் என்றால் மிகையாகாது.

உண்மைத் தன்மை இல்லாத ஒரு சில அயோக்கியர்கள் கையில் சிக்கிக்கொண்ட நம் நாட்டைப் போலவே, நமது பத்திரிகைகளிலும் ஒரு சில கருப்பு ஆடுகளின் அட்டகாசத்தால் பத்திரிக்கையாளர்களின் நிலை இன்று அசிங்கத்தின் உச்சிக்கு சென்று அடைந்து விட்டது..

தொகுப்பு:- சங்கரமூர்த்தி
                      7373141119

Also Read  எட்டக்காபட்டி ஊராட்சியில் தொடர்ந்து நடைபெறும் மக்கள் பணி