உள்ளாட்சியில் பினாமி அதிகாரம்-அரசு நடவடிக்கை

உள்ளாட்சித் தேர்தலில் பெண் கவுன்சிலர் வார்டுகளில் கணவர்கள் மற்றும் ஆண் உறவினர்கள் தலையிட்டால் நடவடிக்கை!

பி டி ஓ க்களிடம் புகார் செய்யலாம்

பெண் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களது கணவர் உள்ளிட்ட பிறர் தலையிட்டால்  பி டி ஓ.க்களிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாதிக்கும் மேல் பெண் தலைவர்கள். வார்டு உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர்.

95 சதவீதம் பேர் தங்களது கணவர்களின் நிழலில் தான் செயல்படுகின்றனர்

இதனால் பெண் பிரதிநிதிகள் நிர்வாகிக்கும் ஊராட்சியில் அவர்களது கணவர்கள் தலைவர்களின் தலையீடு இருக்கக்கூடாது என்ற எண்ணமும் கிராம மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பொதுநல அமைப்பினர் மற்றும் தன்னார்வ ஆர்வலர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க பொது தகவல் அலுவலரிடம் இருந்து விளக்கம் பெற்றுள்ளனர்.

அதில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளின் பணிகளில் அவருடைய கணவர் உள்ளிட்ட பிறர் செயல்படவோ அலுவலக கூட்டங்களில் கலந்து கொள்ளவோ சட்டத்தில் இடமில்லை  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பதவி பொறுப்புகளில் செயல்படும் ஆண் உறவினர்கள் மீது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு அது குறித்த தகவல் அளிக்கப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read  பொறுப்பேற்றார் பொன்னையா இஆப