குடியரசு தின கொண்டாட்டம்- குருந்தினக்கோட்டை கிராமசபை கூட்டம்

சிவகங்கை மாவட்டம்

தேவகோட்டை தாலுக்கா

குருந்தினக்கோட்டை பஞ்சாயத்தில், ஜனவரி 26 அன்று குடியரசு தின விழா கொடியேற்றத்துடன், இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அதை தொடர்து 11.மணியளவில் அந்த விழாவில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட,

பஞ்சாயத்து தலைவி ஜெயந்தி முத்துவேல், மற்றும் துணை தலைவி கலாவதி அந்தோணிராஜ், அவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில், சிகரம் மக்கள் நல மன்ற தலைவர் சுப.சுப்புராமன் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

அது சமயம் அங்கு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

அதில் வாரச்சந்தை அமைத்தல், புறக்காவல் நிலையம், தேசிய வங்கி மற்றும் சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் கருவேலமரம் ஒழிப்பு போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தேசிய கீதத்துடன் குருந்தினக்கோட்டை கிராமசபை கூட்டம் இனிதே நிறைவு பெற்றது…!

Also Read  எழுவன்கோட்டை - சிவகங்கை மாவட்டம்