தந்தை இறந்தார்-தன்னை தனிமைப்படுத்திய தனையன்

சிவகங்கை செந்திலின் தியாகச் செயல்

கொரொனா

இந்த ஒற்றைச் சொல் உலகையே உலுக்கி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் பெரியகாரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் கள்ளிக்குடி.

அந்த கிராமத்தில் ஒருவர் இறந்துவிட்டார். தந்தை இறந்த செய்தியை அறிந்து,அவரின் மகன் செந்தில்குமார் சிங்கப்பூரில் இருந்து பறந்து வருகிறார்.

உற்றார்,உறவினர் ௯டியிருக்க,கண்ணீரோடு தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுகிறார்.

அடுத்து அவர் செய்த காரியம் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னை சுற்றி கயிறை கட்டி நடுவில் அமர்ந்து கொள்கிறார்.

இழவு வீட்டில் கேதம் கேட்பது சிவகங்கையின் சிறப்பு.ஆனாலும்,யாரும் தன்னை நெருங்க வேண்டாம். தூரத்தில் இருந்தே துக்கம் கேளுங்கள் என்று சொல்லி உள்ளார் செந்தில்.

உற்றார்,உறவினரும் மட்டுமல்ல ஊரார் அனைவரும் கலங்கிய கண்களோடு தூரமாய் நின்றே துக்கம் கேட்டனர்.

இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்ன தெரியுமா…சிங்கப்பூரில் இருந்து வந்த செந்திலுக்கு கொரொனா அறிகுறியே கிடையாது. இருந்தாலும்…பிறர் நலனுக்காக தன்னையே தனிமைப் படுத்திய செந்தில் பாராட்டுக்குரியவர்.

இன்னும் இருபது நாள் தான்…உங்களுக்காக மட்டுமல்ல உறவுக்காகவும் தான். சமூக இடைவெளியை கடைபிடிப்போம். கொரொனாவை விரட்டி அடிப்போம்.

Also Read  வேப்பங்குளத்தில் விவசாய புரட்சி - விதை போட்ட திருச்செல்வம்