பிரதமருக்கே முன்னோடியாய் பஞ்சாயத்து

21 நாட்கள்

நேற்று பிரதமர் மக்களுக்கு ஆற்றிய உரையில்,நம்மை தனிமைப் படுத்துவதே கொரொனா ஒழிப்பிற்கு ஒரே வழி என்றார்.

ஒட்டுமொத்த நாட்டிற்கும் நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது. சமூக ஒருங்கிணைப்பு தவிர்ப்பது,தனித்தே இருப்பது என இருபது நாளை கடந்துவிடவேண்டும்.

கொரொனா வைரஸ் பின்னால் கூட சதி உள்ளதாக வதந்தி உலாவருகிறது. வதந்தியை செய்தியாக்கி பயத்தை உருவாக்கவும் ஒரு கும்பல் வேலை பார்க்கும்.

உலகிற்கே அனைத்தும் கற்றுக்கொடுத்தவர்கள் நாம். நமக்கு நாமே தற்காலிக தடையை ஏற்படுத்துவது தவறில்லை.

இந்த இமாலய பணியில்….உள்ளாட்சி பிரதிநிகள் உறுதியோடு பணியாற்ற வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில்,பிரதமர் அறிவிக்கும் முன்பே ஊரடங்கை அமல்படுத்தி விட்டனர்.

கொரொனாவை வெல்லும் வரை தனித்திருப்போம்…வெற்றிக்கு பிறகு இணைந்தே இருப்போம்…

உள்ளாட்சி பிரதிநிதிகளே…உங்களை மட்டுமே நம்பி வாக்களித்து உங்களை தேர்ந்தெடுத்த மக்களை அரணாக இருந்து காப்பது அவசரம் மட்டும் இல்லை,அவசியமும் ௯ட.

 

Also Read  ஒரே கிளிக்...கொரொனா பாதிப்பு விவரம்