சொந்த பணத்தில் பஞ்சாயத்து பணிகள்-கொம்மங்கியாபுரம் தலைவர் தகவல்

கொம்மங்கியாபுரம் ஊராட்சி

விருதுநகர்மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1178 ஆகும். இவர்களில் பெண்கள் 613 பேரும் ஆண்கள் 565 பேரும் உள்ளனர்.

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்.

  1. புல்லக்கவுண்டம்பட்டி
  2. கொமங்கியாபுரம்

இந்த ஊராட்சியின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ள முனியசேகரன் அவர்களுக்கு நமது இணைய தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.

பஞ்சாயத்துக்கு வரவேண்டிய நிதி எங்களுக்கு இன்னும் வந்துசேரவில்லை.அடிப்படை பணிகளுக்கு கூட சொந்த பணத்தில்தான் செலவழித்து வருகிறோம்.

குறிப்பாக…கொரொனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பணிகளுக்கும் சொந்த செலவில் பணிகளை செய்து வருவதாக கூறினார்.

கொரொனா பதட்டம் தணிந்த பிறகு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் இணையத்தின் சார்பாக நிதி பற்றிய கேள்வியை கேட்போம்.

Also Read  முத்துராமலிங்கபுரம் ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்