ஊராட்சி தலைவரின் மகள் யோகாவில் சாதனை வெற்றி

யோகா

ஆசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் மறவர் கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர்  செந்தூரான் அவருடைய மகள் வில்வமுத்தீஸ்வரி வெங்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

முன்னால் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி அவர்களின் பள்ளியில் படித்த மாணவி இவர்.

வெற்றி பெற்ற மாணவியை இராமநாதபுரம் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் செயலாளரும், வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவருமான எஸ் டி செந்தில்குமார் வாழ்த்து தெரிவித்தார்.

நாமும் நமது இணைய தளத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.

Also Read  பல்லாபுரம் ஊராட்சி - திருச்சி மாவட்டம்