ஊராட்சி செயலர் ஒருவரின் கடிதம்

PFMS

பொதுநிதி மேலாண்மைத்திட்டம் என்பது இந்தியா முழுவதும் அனைத்து அரசுத்துறைகளும் நகர்ந்துகொண்டுள்ள ஒரு முக்கியமான நிதி சார்ந்த நகர்தல் இது!

அரசின் நிதிக்கையாளுகை கண்காணித்தல்,பார்வையிடுதல்,வெளிப்படையான நிர்வாகம்,ஊழலற்ற அரசு நிர்வாக அமைப்பு என சிறப்பான காரணிகளை முன்னிறுத்தி செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஊரகவளர்ச்சித்துறை PFMS கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது ஒரு வரலாற்று நிகழ்வாக கருதுகிறோம்..மிக முக்கியமாக அரசின் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதனை அனைவரும் கண்காணிக்கும் வகையில் இருப்பது மக்கள் பிரதிநிதிகளின் ஜெட் வேகத்தில் போடப்பட்ட வேகத்தடையாகவே நாம் காண்கிறோம்.

முன்னரெல்லாம் காசோலையில் தலைவர்,துணைத்தலைவர் கையொப்பமிட்டால் போதும்,ஊராட்சி செயலரே தேவையில்லை என இருந்த சூழலில் தற்போது செயலர் என்ற பதவிக்கேற்ற சாவியை கொடுத்த அற்புத திட்டம் PFMS.

*ஆம்*

PFMS திட்டத்தில் PPA என்று அழைக்க கூடிய வங்கிக்கு அனுப்பக்கூடிய PRINT PAYMENT ADVICE கடிதம் தயாரிக்க USER NAME&PASSWORD ஊராட்சி செயலர் வசமே கொடுக்கப்பட்டுள்ளது..

நாம்தான் இதனை பயன்படுத்தி PPA கடிதம் தயாரித்து தலைவர்,துணைத்தலைவர் வசம் கொடுக்கவேண்டும்..தலைவர்,துணைத்தலைவர் தானாக PPA கடிதம் தயாரிக்க முடியாது.

அதாவது ஊராட்சி கஜானா சாவி  ஊராட்சி செயலரிடம் இருக்கும்.

இப்போது இதில் உள்ள பிரச்சனை என்னவெனில்,

Also Read  மே 3- உலக பத்திரிகை சுதந்திர தினம்

PFMS பண பரிவர்த்தனைகளில் மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் எந்த இடத்திலும் வராமாட்டார்..அவர் வழக்கம்போல மாதம் இருமுறை ஆய்வு அலுவலராக செயல்படுவார்.

அதே நேரம் ஊராட்சி செயலர் எனக்கும் செலவுக்கும் சம்மந்தமில்லை அல்லது எனக்கு தெரியாது என காரணமே சொல்லமுடியாது.

இவ்வளவு நாள் வரவில் மட்டுமே பொறுப்பாக்கப்பட்டிருந்த ஊராட்சி செயலர் இனி செலவிலும் சமபங்கு பொறுப்பாளராகிறார்.

தலைவர்கள் கொடுக்கும் வவுச்சர்கள் எல்லாவற்றிற்கும் PPA கடிதம் தயாரித்து கொடுக்கவில்லை எனில் ஊராட்சி செயலர் சரியில்லை என ஊராட்சி தலைவர்கள் அரசியல் ரீதியாகவும்,நிர்வாக ரீதியாகவும் புகார் அளித்து பணியிடை மாறுதல்,பணிநீக்கம் என பயணிப்பர்..அதற்கு சில அலுவலர்களும்,ஊராட்சி செயலர் சம்பாதித்த எதிரிகளும் பேராதரவு கொடுப்பர்

தலைவர்கள் கொடுக்கும் எல்லாவற்றிற்கும் கடிதம் தயாரித்து கொடுத்தால் அதே அலுவலர் மாதம் இருமுறை நம்மை குற்றவாளியாக்குவதுடன்,தலைவர்கள் சொல்லுவது இருக்கட்டும் தம்பி,சாவி நீதான வச்சிருந்த..அப்புறம் என்ன?..நீதான் தம்பி முதல் குற்றவாளி என சொல்லும் நிலை வரும்!

இதில்..இஷ்டத்துக்கு செலவழிக்கும் தலைவர்கள்,செலவு கணக்கை ஊராட்சி செயலரிடம் காட்ட வேண்டிய அவசியம் இருந்தும்,

ஊராட்சி செயலருக்கு தெரியாமல் செலவழிக்க கூடாது தலைவரே என எந்த மறைமுக அறிவுறுத்தல் கூட அலுவலர்கள் பல இடங்களில் சொல்லுவதில்லை

Also Read  ஊரக உள்ளாட்சி

மத்தளத்துக்கு இருபுறமும் இடி..அதே நிலை ஊராட்சி செயலருக்கும் இப்போது ஏற்பட்டுள்ளது.எனவே மிக கவனமுடன் PFMS ஐ அணுகிட வேண்டும்.

அன்புடன்:-   ஊராட்சி செயலர்களில் ஒருவன்