சாதனை படைக்க காத்திருக்கும். சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்

உள்ளாட்சியில் நல்லாட்சி

புதுமைகள் பல படைக்க வேண்டும்என்று…!புரட்சிகரமான சிந்தனையில்….! பூட்டு சாவி சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் தலைவி கனகா மாரிமுத்து.

இவர் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்று கேள்விப்பட்டவுடன் நாம் திகைத்துப் போய் விட்டோம்….

  கல்விக்கண் திறந்த, படிக்காத மேதை கர்மவீரர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவியாக பொறுப்பேற்றவர் தான் கனகா மாரிமுத்து.
அவரிடம் இதுபற்றி அவாிடம் கேட்டபோது:-

ஏழை எளிய மக்களின் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள எழுத படிக்க தெரிய வேண்டியதில்லை…  அவர்களின் மனநிலை மற்றும்  அடிப்படைத் தேவையை புரிந்து கொண்டு செயலாற்ற அனுபவம் போதாத…?

நமக்கு பக்கத்தில் நேர்மையான, நம்பிக்கையான, படிப்பறிவுள்ளவர்கள் இருந்தாலே போதும், இந்த பாரதத்தில் எதையும் சாதிக்கலாம்.

எனக்கு என் கனவர் பக்க துணையாக இருக்கிறார் என்று நம்மிடம் தனது புரட்சிகரமான கருத்தை பதிவுசெய்தார் கனகா மாரிமுத்து.

  மேலும் அவர் நம்மிடம் கூறியபோது எங்களது ஊரான சத்திரப்பட்டி இந்தியா மருத்துவ உலகம் அதிகம் கவனிக்கப்படும் ஊராகும்.

   காரணம் இங்கிருந்துதான் உலகளவில் மருத்துவத்திற்கான பேண்டேஜ் துணிகளை சப்ளை செய்கிறோம்.குறுகிய பரப்பளவு உள்ள கிராமமாக இருந்தாலும்.

சத்திரப்பட்டிக்கு உட்பட்ட பகுதியில் 6 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள்.
எங்களின் அடிப்படை தேவையே சுத்தம் சுகாதாரம் தான்.

Also Read  தடையில்லா குடிநீர்-சொக்கநாதன்புத்தூர் தலைவி சூளுரை

  எங்கள் கிராமத்தை சுற்றி உள்ள பல கிராமங்களில் இருந்து மக்கள் எங்கள் சத்திரப்பட்டிக்கு வந்தது செல்வார்கள்.

   சத்திரப்பட்டி ஒரு ஜங்ஷன் என்றால் மிகையாகாது.

    எனவே மக்கள் அதிகம் வந்து போகும் பகுதியான எங்கள் ஊரில் குப்பைகளில் சேர்வது அதிகம்.இது தவிர்க்க முடியாத ஒன்று.

இந்த குப்பைகளை கொட்டுவதற்கு தான் எங்கள் பகுதியில் எந்த இடமும் கிடையாது.
எங்களது குப்பையை அருகே உள்ள ராஜபாளையம்  எல்லைக்கு உட்பட்ட இடங்களில் கொட்டி வந்தார்கள்.  அது தற்போது தடை செய்யப்பட்டது…!

எங்களுக்கு குப்பைகளை அகற்றி சுத்தமாக தரம்பிரித்து அவைகளை முறைப்படுத்த இடம் தேவை, என்று
எங்களது ஊராட்சி மன்றத்தில் தீர்மானித்து அதற்காக மாவட்ட கலெக்டர் அவர்களை சந்திக்க இருக்கிறோம்.

  மேலும் தாமிரபரணித் தண்ணீர் எங்களுக்கு குடிநீராக கிடைத்து வருகிறது.
அந்த தண்ணீர் தடையில்லாத குடிநீராக எங்களுக்கு கிடைப்பதாகவும்,
கொசுத் தொல்லையை இல்லாத பகுதியாகவும், சாலையில் வசதிகளை செப்பனிட்டு, தெரு வழிச்சாலைகளையும் செப்பனிட்டு சிறப்பான முறையிலே சுகாதாரத்தையும் பேணிக் காக்க வேண்டும் என்பதே எங்களது அடிப்படையான நோக்கம்.

   கடந்த 26ம் தேதியன்று குடியரசு தின நன்னாளில் எங்கள் பகுதியில் உள்ள 15 முதியவர்களுக்கு பென்ஷன் திட்டம் பெற ஆவன செய்து உள்ளோம்.

Also Read  புல்வாய்க்கரை ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்

அதுபோக எங்கள் பஞ்சாயத்தில் புகார் புத்தகம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது.

அதில் பொதுமக்கள் எழுதி வைக்கும் புகார்களை உடனுக்குடன் கண்டறிந்து நிவர்த்தி செய்ய தயாராக இருக்கிறோம்.

   எங்கள் பகுதியில் மண் வீடுகளே அதிகம் அதை மாற்றி அமைக்க பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் செயல்பட துவங்கி உள்ளோம்.

  அதில் இதுவரை 71 நபா்கள் மனு செய்துள்ளார்கள்.

   எங்களது மன்றத்தின் துணைத் தலைவர் ராமர் என்ற ராமசாமியும் எங்களுக்கு உறுதுணையாக இருந்து 24 மணி நேரமும் எந்த புகார் கிடைத்தாலும் செயல்பட காத்திருக்கிறோம்.

மேலும் எங்களது ஒரே ஆசை தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே மிகச் சிறந்த ஊராட்சி மன்றமாக எங்கள் சத்திரப்பட்டி ஊராட்சி மன்றம் திகழும் வேண்டும்.

பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கையால் விருது பெற வேண்டும் என்பதே எங்களது மிகப்பெரிய நோக்கமாகும் என்று கூறினார்.
அந்த படிக்காத மேதை காமராஜரை போன்ற கனகா மாரிமுத்து…!

சத்திரப்பட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும்.சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கும், அவர்களது நோக்கம் நிறைவேற வேண்டும் என்று வாழ்த்துவதில் நமது “tnபஞ்சாயத்து செய்திகள்”பெருமை அடைகிறது…!

செய்திகள்:-சங்கரமூர்த்தி
7373141119