பஞ்சாயத்து தலைவருக்கு கல்வித் தகுதி தேவையா?

மக்கள் பிரதிநிதி

மக்களால் தேர்ந்தெடுக்கும் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு வயது மட்டுமே தகுதியாய் உள்ளது.

சட்டமன்ற,நாடாளுபன்ற இன்னபிற பதவிகளை விட பஞ்சாயத்தில் தலைவர்,துணைத்தலைவர் பதவி தனித்துவம் வாய்ந்தது.

ஆம்…இந்த இரண்டு பதவிக்கு மட்டுமே பண பரிவர்த்தனை செய்யும் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர்,முதலமைச்சருக்கு ௯ட காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் கிடையாது.

படிக்கத் தெரியாத பஞ்சாயத்து தலைவர் எப்படி காசோலையில் கையெழுத்து இடுவது சரியாகும். என்ன செலவு,என்ன காரணம் என்று அறிந்து தெரியாமல் கையெழுத்து இடுவது மிகப்பெரிய சிக்கலில் மாட்டவைக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர்.

இந்த விசயத்தில் விரைந்து முடிவெடுப்பது மக்கள் ஜனநாயகத்திற்கு நல்லது.

Also Read  பஞ்சாயத்து தலைவரும்-செயலரும்