குடிநீர்
தாகம் தீர்க்க தடையில்லாத குடிநீர் வேண்டும் என்பதே எங்களது சொக்கநாதன் புத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.அதை சரிவர நிறைவேற்றுவதே எங்களது முதல் கடமையாகும், என்றார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,
சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவி சாந்தி.
மேலும் அவர் நமது “tnபஞ்சாயத்து செய்திகள்” யூடியூப் சேனல் செய்திகளுக்காக நமது நிருபரிடம் கூறியதாவது:- எங்கள் ஊரில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.
இங்கு எங்களது தாகம் தீர்க்கும் அடிப்படைத் தேவைகளில் ஒன்றன குடிநீருக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி தேவிபட்டணம் வழியாக எங்கள் ஊரை கடந்து செல்லும் தேவியாற்றைத்தான் நம்பி உள்ளோம்.
அந்த ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றிலிருந்து தான் எங்களது பகுதிக்கு குடிநீர் எடுத்து கொண்டு வர இதுவரை செயல்படுத்தி வந்தார்கள்.
அதில் பல சிக்கல் சிரமங்கள் இருந்தது.
அந்த கிணற்றை நெருங்க முடியாத அளவுக்கு முள்புதர்கள் மூடிக்கிடந்தன, தற்போது நாங்கள் புதிதாக பொறுப்பேற்ற பின்பு அந்தக் கிணற்றை சுற்றியுள்ள பகுதிகளில் காடுபோல் வளர்ந்திருந்த, முள் புதர்களை நீக்கி சுத்தம் செய்தோம்.
கிணற்றில் நீர் இறைக்கும் மின்மோட்டாரை சரி செய்தும் தற்போது தண்ணீர் எடுப்பதற்கு சௌகரியமான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
மேலும் கழிவுநீர் பாதையில் வளர்ந்துள்ள மரம்,செடி, கொடி, முள்புதர்களை இயந்திரதால் அகற்றி வாறுகால் (சாக்கடை) சுத்தப்படுத்த சுத்தப்படுத்தி வருகிறோம்
மேலும் ஆரம்பப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என்று இரண்டு பள்ளிகள் உண்டு.
இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
எங்களுக்கு தேவையான நவீன கழிப்பிட வசதிகள், மற்றும் வாறுகால்(சாக்கடை) வசதிகள், சாலை வசதி, தெரு விளக்குகள் போன்றவற்றை, சிறப்பாக தங்கு தடையில்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, எங்களது ஊராட்சி மன்றத்தில் பத்துக்கு மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றி.
அதை அரசு ஊரக வளர்ச்சி திட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கொடுத்துள்ளோம்.
அதுபற்றி அடுத்து வரும் கூட்டத்தில் அந்த தீர்மானங்களுக்கு ஏற்ப நிதி நிலைகளை ஆய்வு செய்து பணிகளை தொடங்க உள்ளோம் என்று நம்மிடம் தெரிவித்தார் சொக்கநாதன் புத்தூர் ஊராட்சி மன்ற தலைவி சாந்தி….!
அவர் பணி சிறக்க நமது வாழ்த்துக்கள்
செய்திகள்:- சங்கரமூர்த்தி
7373141119