தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க, செயல்வீரர்களான… தலைவர்கள்.திரு.சார்லஸ்ரெங்கசாமி இளம்சிங்கம், ஜான் போஸ்கோ பிரகாஷ், ஆகியோர்களின் தலைமையில் இயங்கும்….
தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்க மாநில தலைவர் தருமபுரி.க.கிருஷ்ணன் தமிழக அரசுக்கு பாதுகாப்பு நடவடிக்கை, வேண்டுகோள் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்
அதில் அவர் கூறியுள்ளதாவது:-
தமிழக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும்
ஓஎச்டி.இயக்குனர்கள், தூய்மைபணயாளர்கள், தூய்மைகாவலர்கள், ஆகிய மூன்று
நிலைபணியாளர்கள், பணியாற்றுகிறார்கள்.
ஆனால் அரசு நிவாரணம் வழங்கும் போது
ஓஎச்டி.இயக்குனர்களை மட்டும் புறக்கணிப்பது ஒரு கண்ணுக்கு மட்டுமே சுண்ணாம்பு வைப்பது போல் வேதனை அளிக்கிறது..
கிராம ஊராட்சி மூன்று நிலைபணியாளர்களையும். ஒரே மாதிரியான பணி வரை முறைக்குள்
கொண்டு வர தமிழக அரசை வழியுரித்தி கேட்டுக்கொள்கிறோம்.
சமிபகாலங்களில் கிராம ஊராட்சி பணியாளர்கள் மீது, அதிகாரத்தில் இருக்கும் சிலர் தங்களது சொந்த விருப்பு.. வெறுப்பை காட்டி
எங்களின் ஏழை-எளிய பணியாளர்களை, கடுமையாக அடித்து உதைத்து தாக்கும் சம்பவங்கள் தற்பெழுது தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரங்கேறி வருகிறது.
ஏற்கனவே குறைந்த ஊதியத்தில் வாழ்வா…? சாவா..? என்ற பொருளாதார கொடுமையில் சிக்கி தவித்து வாழ்ந்து கொண்டே இருக்கின்ற ஏழை எளிய மக்களை இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறும் போது பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி கடும் மனஉளைச்சல் ஏற்பட்டு. தற்கொலை வரை கூட சென்று விட்டது…..
(உதாரணமாக:- திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் பாலகிருஷ்ணாபுரம் மேல்நிலை தொட்டி ஆபரேட்டர் கோவிந்தசாமியை, அந்த ஊராட்சி மன்ற உறுப்பினரின் கணவர் அடித்து உதைத்து தாக்கிய சம்பவம்…
மற்றொன்று தற்கொலை சம்பவம் அது….
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பனிகுறிப்பு ஊராட்சியின், மேல்நிலைத் தொட்டி ஆப்ரேட்டர் முனியசாமியின் தற்கொலை..
அந்த சம்பவத்தில் போலீசார் கைப்பற்றிய ஆப்பரேட்டர் முனிசாமி தனது கைப்பட எழுதியுள்ள கடிதத்தில்…
எனக்கு ஐந்து மாதமாக ஊராட்சி சம்பளம் தரவில்லை மேலும் எனது தற்கொலைக்கு காரணம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவரும் அவரது உறவினர்கள் தான் என்று விளக்கமாக எழுதியுள்ளார் இது குறித்து போலீஸ் மேல் விசாரணை நடந்தி வருகிறது..)
எனவே மாண்புமிகு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்களும், தமிழக அரசு உயர் அதிகாரிகளும்.. கருணையுடன் எங்கள் வேண்டுகோள் விண்ணப்பத்தை, கனிவுடன் கவனித்து மனுவை பரிசீலனை செய்ய வேண்டும்..
நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், பொதுமக்களின் அன்றாட அடிப்படை தேவைகளுக்காக சிறப்பாக அல்லும், பகலும், சுத்தம் சுகாதாரப் பணிகளில் தங்களை அர்பணித்துக் கொண்டு, செயல் ஆற்றும் ஏழை எளிய பணியாளர்களுக்கு..
நியாயமான உரிய நீதி கிடைக்கவும், மேலும் இது போன்ற கொடுமையான வன்முறை, அராஜக அடி, உதை நிகழ்வுகள் நடைபெறாமல்… தடுத்து உழைக்கும் பணியாளர்களுக்கு உரியபாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…
இவ்வாறு மாநில தலைவர் தருமபுரி.க.கிருஷ்ணன் அந்த அறிக்கையில் பதிவு செய்துள்ளார்…