தமிழ்நாட்டில் தனித்துவமானது வேப்பங்குளம் ஊராட்சி- பெருமைப்படும் சித்ரா கணேசன்

சிவகங்கை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வறட்சிக்கு மத்தியிலும் தனித்து வெற்றி கண்டு தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த பஞ்சாயத்த வேப்பங்குளம் பஞ்சாயத்து… என்றால் மிகையாகாது…

கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பங்குளம் கிராம ஊராட்சி ஊராட்சியில், புதுவேப்பங்குளம், சந்தனஏந்தல், தெம்மாவயல், அச்சாணி, அறிகுறிஞ்சி, கல்குளம், பழையவேப்பங்குளம், பேர்வலசை, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட வேப்பங்குளத்தின் 2011-ம் ஆண்டு மக்கள் ஜனத்தொகை கணக்கெடுப்பின்படி பெண்கள் 1083, ஆண்கள் 961…. ஆக மொத்தம் 2044. ஆகும்..

14 ஊரணிகள் அதாவது குளங்கள் இருந்தும் கடுமையான வறட்சியில் விவசாயம் மிகவும் பின் தங்கி இருந்த இந்த வேப்பங்குளம் கிராமம்…

தற்போது நீர் மேலாண்மையில் சிறப்புடன் இருப்பதாக நிலத்தடி நீர் ஆய்வாளர்கள் வியந்து பாராட்டுகிறார்கள்…

கடந்த ஆண்டு நிலத்தடி நீர் மேலாண்மைக்காக  மாவட்ட கலெக்டரின் சுதந்திர தின விருதை வேப்பங்குள கிராமம் பெற்று பெருமை பெற்றுக்கொண்டது…

மேலும் ஒன்பது விவசாயிகளுக்கும் நீர்நிலை மேலாண்மையில் சிறப்பாக பணியாற்றியதற்காக சுதந்திரதின விழாவில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பரிசுகள் வழங்கி பாராட்டியது சுதந்திர தின சிறப்பு…

தமிழகத்தின் வரட்சி மண்டலமாக இருந்த சிவகங்கைச் சீமையில். தண்ணீரில் தன்னிறைவு பெற்ற வேப்பங்குளம் கிராமத்திற்கு இந்தியாவின் தண்ணீர் மைந்தர் என்று விவசாயிகளால் போற்றப்படும் ராஜேந்திர சிங் இந்த கிராமத்திற்கு வருகை தந்து நீர் மேலாண்மைக்காக பாடுபட்ட கிராம மக்களை பாராட்டியது மேலும் ஒரு சிறப்பு அம்சமாகும்..

Also Read  சுகாதார நடவடிக்கையில் அரியநாயகிபுரம்

தற்போது வேப்பங்குளம் கிராம ஊராட்சி மன்றத்திற்கு தலைவர், துணைத் தலைவர், உள்பட 9-வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்…

வேப்பங்குளம் கிராம ஊராட்சியின் தற்போது செயல்பாடு திட்டங்களைப் பற்றி ஊராட்சி மன்ற தலைவி சித்ராவிடம் தொடர்பு கொண்டு பேசிய போது. அப்போது அவர் கூறியதாவது:-

எங்களது வேப்பங்குளம் நீர் மேலாண்மையில் சிறப்பாக இருப்பது எங்களது கிராமத்துக்கு மட்டுமல்ல எங்களின் சிவகங்கை சீமைக்கே பெருமையாகும் என்று கூறினார்…

மேலும் தற்போது இந்த கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதுபோக மக்களின் அடிப்படை வசதியான தண்ணீருக்காக பழுதடைந்த தண்ணீர் தொட்டி களையும் குழாய்களையும் செப்பனிட்டு வருகிறோம் என்று கூறினார்.

மேலும் பல சிறப்பு அம்சம் திட்டங்களை நாங்கள்… எங்களது கிராம வார்டு உறுப்பினர்களின் ஆதரவுடனும், அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம் என்றும் வேப்பங்குளம் கிராம ஊராட்சி தலைவி சித்ரா நம்மிடம் கூறினார்.