சினிமாவில் அத்திப்பட்டி…சிவகங்கையில் வேப்பங்குளம்?

விவசாயத்தை அழிப்பதா..

இனி…இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தை நம்பி மட்டுமே இருக்க போகிறது.மக்களுக்கு அனைத்து வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பே இயற்கை உணவே ஆகும்.

இந்த சூழ்நிலையில்…வறண்ட பூமியாக மாறிய நிலத்தை மீண்டும் வளமான பூமியாக மாற்றிய வேப்பங்குளத்தை வேரோடு அழிக்கும் பணி ஆரம்பமாகி உள்ளது.

மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு
மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு

வேப்பங்குளத்தை பற்றி நமது இணைந்தில் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

வேப்பங்குளம்

சூரியமின் உற்பத்தி ஆலை

கரையான் கட்டிய புற்றுக்குள் கருநாகம் புகுந்த முதுமொழிக்கேற்ப முன்னூறு ஏக்கரில் சூரிய ஒளி மின்சார ஆலை அமைப்பதற்கு அடிப்படை வேலையை ஆரம்பித்துள்ளனர்.

மக்களிடம் ஆலையை பற்றி எந்த தகவலோ,ஆலோசனையோ செய்யாமல் அடிப்படை வேலையை ஆரம்பித்தது மிகப்பெரிய தவறு.

நீர்மேலாண்மை விருது

வானம் பார்த்த பூமியை வளமான மண்ணாக மாற்ற ஊர் கூடி,உடல் உழைப்பையும்,தங்களின் பொருளாதாரத்தையும் கொண்டு 17 கிலோமீட்டர் தூரம் நீர்வரத்து கால்வாயை தூர்வாரி இருபோகம் விளையும் மண்ணாக மாற்றினர்.

அப்படி அவர்களின் ரத்தத்தில் உருவான நீர்வரத்து கால்வாயை ஆலை அமைப்பதற்காக மண் அள்ளிப்போட்டு மட்டப்படுத்தியதை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழக அரசு

தாயை கொன்று அவளின் இதயத்தை விற்று வருமானம் பார்ப்பதற்கு ஈடான செயல் இது.

Also Read  ஆ.தெக்கூர் ஊராட்சியில் குடிநீரில் தன்னிறைவு -தலைவி தனலட்சுமி உறுதி

இந்த செயலை தடுத்து நிறுத்த வேண்டிய முழு பொறுப்பும் அரசுக்கு உள்ளது.

வரப்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்.

வரப்பு உயர நெல் உயரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோல் உயரும்; கோல் உயரக் கோ உயரும்.

இந்த அவ்வையின் மொழிக்கேற்ப நான் விவசாயி மகன் என கூறும் முதல்வர் நல்ல முடிவெடுப்பார் என நாம் நம்புவோம்.

மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட அனைத்து துறைகளுக்கும் ஊராட்சி சார்பாக மனு கொடுக்கப்பட்டு உள்ளது.