கிராம உதவியாளரை தாக்கியவர் மீது நடவடிக்கை- மாநில சங்கம் சார்பாக வேண்டுகோள்

வேண்டுகோள்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சார்பாக கோரிக்கை வத்துள்ளனர்.

அதில் கூறி உள்ளதாவது…

வருவாய்துறை கிராம உதவியாளர்கள் தற்சமயம் கொரானா என்ற நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தன் உயிரையும் தன் குடும்பத்தார் உயிரையும் பெரிதாக நினைக்காமல் 24 மணி நேரமும் பணி செய்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஆணைவாரி கிராமத்திற்கு கோயம்மேடு பகுதியில் இருந்து 31 நபர்கள் வந்துள்ளனர் மேல்படி நபர்களை மருத்துவர் குழு தலைவர் காயத்ரி அவர்கள் தலைமையில் கிராம உதவியாளர் பாலு விசாரனை செய்து வந்துள்ளனர்.

அப்போது கிராம உதவியாளர் பாலு என்பவரை நரசிங்கம் மகன் வேலு என்பவர் கிராம உதவியாளரை தாக்கியும் அவதூறாக பேசியும் வாகனத்தை தாக்கி உள்ளார் என்ற செய்தி பத்திரிக்கையில் வந்துள்ளது.

இந்த செயலை தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் தமிழக அரசு கிராம உதவியாளர் பாலு அவர்களை தாக்கிய வேலுவின் மீது தக்க நடவடிக்கை எடுத்து கிராம உதவியாளருக்கு பணி பாதுகாப்பும் உயிர் பாதுகாப்பும் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்

என தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Also Read  கலெக்டர் அதிகாரம்...கலக்கத்தில் பஞ்சாயத்து தலைவர்கள்