உள்ளாட்சித்துறை அமைச்சருடன் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சந்திப்பு

அமைச்சருடன் சந்திப்பு

தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

இன்று(4.5.2020) ஊரகவளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் சாா்பில் நமது மாண்புமிகு.அமைச்சா் அவா்களை மாநிலத்தலைவரும் மற்றும் தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான பொள்ளாச்சி. திரு.க.பாலசுப்பிரமணியன் வ.வ.அ.அவா்கள் தலைமையில் TNRDPUEA கோவை மாவட்ட தலைவா் திருA.V..சீனிவாசன் வ.வ.அ உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் சந்தித்து நமது துறை தொடா்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருதல் தொடா்பாக பேசினாா்கள்.

1.கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊரகவளா்ச்சி துறை பணியாளா்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குதல்.

2, ஜாக்டோ ஜியோ நடவடிக்கைகளில் ஈடுபட்ட பணியாளா்கள்மீது பிறப்பிக்கப்பட்ட 17(ஆ) குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க கோருதல்.

3.ஊரகவளா்ச்சிதுறையின் அனைத்து திட்டங்களையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்லும் ஊராட்சி செயலா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குவதுடன் அரசுபணியாளா்களுக்குரிய அனைத்து,சலுகைகளையும் வழங்கக்கோருதல்.

4.காலியாக உள்ள ஒன்றிய பணியிடங்கள்,ஊராட்சி செயலா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப கோருதல்.

5, ஊரகவளா்ச்சி துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநா் பணியிடங்களை பதவி உயா்வின் மூலம் நிரப்ப கோருதல் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

மாண்புமிகு.அமைச்சா் அவா்கள் மாண்புமிகு. முதல்வா் அவா்களிடம் இது குறித்து தெரிவித்து விரைவில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

Also Read  செயல்வீரர்களின் கரங்களை வலிமைப்படுத்துவோம்... தலைவர்களை பாராட்டும் தருமபுரி க.கிருஷ்ணன்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.