தம்மம்பட்டி அருகே கொரோனா பணியில் இருந்த கிராம உதவியாளர் மாரடைப்பால் மரணம்

சேலம் மாவட்டம்

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி V.A.O., அலுவலகத்தில் கிராம உதவியாளராக தம்பம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் செந்தில் (வயது 48)பனியாற்றி வந்தார்.

இந்த நிலையில் மேற்கு வங்காளம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை(19.5.2020) செந்தாரப்பட்டி வந்த மூன்று நபர்களுக்கு தம்பம்பட்டி அரசு மருத்துவமனையில் ஸ்வாப் டெஸ்ட் எடுப்பதற்காக அவர்களை அழைத்து வந்தார்.

வரும் வழியில் நெஞ்சுவலி இருப்பதாக கூறிய செந்தில் மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள்.
அவர் முன்பே உயிரிழந்துவிட்டார் இந்த தகவலை அடுத்து அவரது உடலுக்கு செங்கம்பள்ளி வருவாய்த்துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பணியில் ஈடுபட்டிருந்த கிராம உதவியாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் வருவாய்த்துறை ஊழியர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கெங்கவல்லி வட்டாட்சியர் சிவக்கொழுந்து  உயிரிழந்த செந்திலின் தந்தை சீனிவாசனிடம் அரசின் முதல் கட்ட நிவாரண தொகையாக 25 ஆயிரம் ரூபாயை வழங்கினார்..!

மாரடைப்பால் மரணமடைந்த கிராம உதவியாளர் செந்திலுக்கு மனைவி மற்றும் மகள் மகன் உள்ளனர்.

பணியின்போது பரிதாபமாக உயிரிழந்த செந்திலின் குடும்பத்தாருக்கும் அவரது உறவினர்களுக்கும், நமது “tnபஞ்சாயத்து செய்திகள்” ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்கிறது.

Also Read  வரும்முன் காப்போம்-உள்ளாட்சி அமைச்சர் வேண்டுகோள்
ஐம்பது லட்சமும்,அரசு வேலைவாய்ப்பும்

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க மாநில மைய நிர்வாகிகள்
கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்…

அதைத்தொடர்ந்து தமிழக முதல்வரிடம் நிவாரண நிதி கேட்டு…
கோரிக்கை ஒன்றை வைத்தனர் அதில் மாநிலத் தலைவர் காண்டீபன் கூறியதாவது.

வருவாய் துறையில் கிராம உதவியாளர்கள் தன் உயிரை கூட பெரிதாக நினைக்காமல் பணி செய்து வருகின்றனர்.

குறிப்பாக கொரானாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வழங்கும் அரிசி, பருப்பு, காய்கறிகளை வழங்கி வருகின்றனர்.

மாவட்ட எல்லையில் உள்ள Cheak post -ல் இரவு பகலாக பணி செய்து வருகின்றனர். வெளி மாநிலத்தில் இருந்து வருவோர்களை கொரானா நோய் உள்ளதா என்று சோதனைக்கு அழைத்து சென்று பணி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தங்கம்பட்டி அருகே செந்தாரபட்டி (வடக்கு) கிராம உதவியாளர் தசெந்தில் என்பவர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களை கொரானா நோய் பரிசோதனைக்கு அழைத்து செல்லும்போது இறந்து விட்டார்.

அவருக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ஏனைய அரசு ஊழியர்களுIக்கு வழங்குவது போல 50,00,000 ஐம்பது லட்சம் நிதியும் அவருடைய குடும்பத்தார் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணியும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Also Read  கொரோனா நிவாரண நிதி:ஒரு மாத சம்பளத்தை வழங்கிய கரூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்

என தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.