இணையவழி கலந்துரையாடல் – உள்ளாட்சி பிரதிநிதிகளே வாருங்கள்

ஆலோசனைக்குழு

நமது இணைய தளத்தின் ஆலோசகர்களாக பல்வேறு துறைகளை சார்ந்தோர் உள்ளனர்.

  1. உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்தில் உள்ள அதிகாரம் பற்றி அறிந்துகொள்வோம்.
  2. இயற்கை வேளாண்மையை நடைமுறை படுத்துவது பற்றி தெரிந்துகொள்வோம்.
  3. ஊராட்சிகளில் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்துவது பற்றி விவாதிப்போம்.
  4. சிறுகுறு தொழில்களை ஊராட்சி அளவில் செயல்படுத்துவதை பற்றி சிந்திப்போம்.
  5. மத்திய,மாநில அரசுகளிடம் கேட்டு பெறவேண்டியதை ஆராய்ந்து பார்ப்போம்.
  6. பஞ்சாயத்துராஜ் சட்டம் கொடுத்துள்ள அதிகாரம் என்னவென்று கலந்துரையாடுவோம்.
  7. கிராமப்புற பெண்களின் வேலைவாய்பு பற்றி விரிவாக விவாதிப்போம்.
  8. இணைய வழியே என்னென்ன செய்யலாம் என தெரிந்துகொள்வோம்.
  9. ஊராட்சி பகுதியில் உற்பத்தியாகும் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி எப்படி விற்பனை செய்யலாமென விவாதிப்போம்.
  10. நீர்மேலாண்மையை அனைத்து ஊராட்சிகளும் அமல்படுத்துவது எப்படி என்று ஆலோசிப்போம்.

இப்படி பல்வேறு விடயங்கள் குறித்து இணைய வழி காணொளி மூலமாக வாரம் ஒருமுறை கலந்துரையாட உள்ளோம்.

மாவட்டத்திற்கு ஒரு ஊராட்சி வீதம் தேர்ந்தெடுத்து உரையாடுவோம்.

இணைந்து செயல்பட்டால் இயலாதது ஒன்றும் இல்லை.

எங்கள் இணைய ஆலோசகர்கள் குழுவோடு கலந்துரையாட விரும்பும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கீழ்கண்ட முறையில் தொடர்பு கொண்டு உங்களின் முழுவிபரங்களை தெரிவிக்கவேண்டுகிறோம்.

இமெயில்:- tnpanchayat@gmail.com

வாட்ஸ்ஆப் எண் :-+ 918637689734

Also Read  ஆன்லைன் வரிவசூல் -அரைகுறையான அரசு உத்தரவு

தலைமை செய்தியாளர் தொடர்பு எண் : – 7373141119