ஆன்லைன் வரிவசூல் -அரைகுறையான அரசு உத்தரவு

கிராம ஊராட்சி

இன்றுமுதல் தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளிலும் ஆன்லைனில் மட்டுமே அனைத்து வரிகளையும் கட்ட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

நாமும் அவர்கள் அறிவித்துள்ள இணைய தளத்திற்குள் சொத்து வரியை செலுத்துவதற்கு முயற்சித்தோம். ஆனால், கட்டணத்தை செலுத்த முடியவில்லை.

ஒரு ஊராட்சி செயலாளரிடம் பேசியபோது, இணைய தளத்தை முழுமை படுத்தாமலே இன்று முதல் நடைமுறை என அவசரப்பட்டு அறிவித்துள்ளது அபத்தமானது என்றார்.

வரி செலுத்துபவர் இணையம் மூலம் உள் நுழைவதற்கு வீட்டின் எண் அல்லது வரி விதிப்பு எண் அவசியம். பெயரை ஆங்கிலத்தில் கட்டாயம் டைப் செய்ய வேண்டும். மின்னஞ்சல் முகவரி தேவை.

ஊராட்சிகளில் வாழும் மக்கள் எப்படி ஆன்லைன் மூலம் வரிகளை செலுத்துவது என்பதை அறிந்து புரிந்து கொள்வற்கே கொஞ்ச காலம் ஆகும்.

ஊராட்சிகளில் கணிணி மையம் நடத்துபவர்கள் இதனை ஒரு தொழிலாக செய்ய தொடங்குபவர். வரியோடு சேர்த்து அவர்களுக்கு கூடுதல் கட்டணத்தொகையை செலுத்தவேண்டிய நிலை வரும்.

எல்லா ஊராட்சிகளிலும் கணிணி இருந்தாலும், நெட் வசதி செய்யவில்லை. 12525 ஊராட்சிகளிலும் கம்பிவட வசதி நடைமுறைக்கு வருவதற்கே ஆண்டுகள் ஆகும். அப்படி ஒரு சூழ்நிலையில்,அடிப்படை வசதி ஏற்படுத்தாமல் ஆன்லைனில் மட்டுமே வரி செலுத்த முடியும் என அறிவித்துள்ளது அரசின் அறிவார்ந்த செயல் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

Also Read  நகரம்பட்டி ஊராட்சி. - சிவகங்கை மாவட்டம்

தற்போது உள்ள பணிகளையே செய்து முடிப்பதற்கு காலம் இல்லாத ஊராட்சி செயலாளர்களுக்கு இது மிகப்பெரிய கூடுதல் சுமை.

தலைமையில் இருந்து உத்தரவு போடுவது சுலபம். நடைமுறை படுத்துவதில் உள்ள சிரமங்களை உடனடியாக களைய வேண்டியது அவசர அவசியம் ஆகும்.

ஆன்லைனில் எப்படி வரி செலுத்துவது என்பதை பற்றி முழுமையான வீடியோ வெளியிடுவது தான் அனைத்து மக்களுக்கு புரியும். அதைவிட, ஆன்லைனில் வரி செலுத்தவதற்கான அனைத்து வழிமுறைகளையும் இணையத்தில் முழுமை படுத்தவேண்டும்.

அடிப்படையாக, அனைவரின் கைபேசி எண்ணையும் முறையாகவும்,சரியாகவும் பதிவேற்றம் செய்ய்பட்டுதா என உறுதி படுத்த வேண்டும்.அதன்பிறகு,ஆன்லைனில் வரிவசூல் என உத்திரவு இடுவதே அறிவுடையோர் செயல் ஆகும்.