கிராம ஊராட்சிகளில் ஆன்லைனில் மட்டுமே வரிவசூல்- தமிழக அரசு அறிவிப்பு

*கணினிமயமாகும் கிராம ஊராட்சிகள் – நாளை முதல் ஆன்லைன் மூலமாக கட்டணம் பெறப்படும் – தமிழக அரசு அறிவிப்பு.*

கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் செலுத்தும் வரிகள் அனைத்தும் நாளை முதல் ஆன்லைன் மூலமாக பெறப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் இணையதளம் மூலமாக செலுத்தப்பட வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அனுமதி நாளை முதல் இணையதளம் மூலமாக வழங்கப்படும்.

ஊரக பகுதிகளில் கட்டடங்களுக்கான அனுமதி வழங்கும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட இணையதளம் நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

கிராம ஊராட்சிகள் பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு பணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே பெற வேண்டும்.

வரி மற்றும் வரியில்லா இணங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக tnrd.tn.gov.in இணையதளத்திலும்,

கிராம ஊராட்சிகளுக்கு எல்லைக்கட்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக மட்டுமே அனுமதி பெற வேண்டும்.

Also Read  வில்லிசேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்