ஊராட்சி செயலாளர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் வெற்றி

பேச்சு வார்த்தைக்குறிப்பு

ஊராட்சி செயலர்களுக்கு கிராம ஊராட்சிகளில் ஊதியம் தாமதமாக வழங்கப்படுவது உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க
நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது அதன்போது கீழ்க்கண்ட விவரங்கள்
தெரிவிக்கப்பட்டது.

ஒற்றைமையக் கணக்கின் மூலம் ஊராட்சியின் மொத்த பகிர்மான நிதியம் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன்மூலம் நிதிப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஆவன
செய்யப்படும். அதற்கென கீழ்காணும் வழிமுறைகளில் மேற்கொள்ள மென்பொருள்
உருவாக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளது.

1. ஒற்றைமையக் கணக்கின் மூலம் கிராம ஊராட்சிக் கணக்கிலிருந்து
மாதத்தின் முதல் நிதிப்பரிவர்த்தனையாக கிராம ஊராட்சி செயலர்
உட்பட்ட கிராம ஊராட்சி பணியாளர்களின் ஊதியம் வழங்கப்படுவது உறுதி
செய்யப்படும்.

• கிராம ஊராட்சி செயலர்களால் நிதிப்பரிவர்த்தனையை துவக்கி
வைக்கப்பட்டு மின்னணு கையொப்பத்தின் அடிப்படையில்
நிதிப்பரிவர்த்தனைகள் அடுத்தநிலை மேற்கொள்ள ஆவன
செய்யப்பட்டுள்ளது.

• ஊராட்சி பணியாளர்களின் ஊதியம் வழங்கப்பட்ட பிறகே பிற பணிகளுக்கான நிதிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள ஏதுவாக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

2. கிராம ஊராட்சி செயலர்களுக்கு பணி மாறுதல் மற்றும் பணி விதிகள்
குறித்த ஆனணயும் விரைவில் வெளியிட பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பேச்சுவார்த்தையின் முடிவில் எழுத்துபூர்வமாக அரசு தெரிவித்துள்ளது.

ஜான்போஸ்கோ பிரகாஷ்

தங்களின் கோரிக்கையில் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அரசு உறுதி அளித்துள்ளதால், போராட்டத்தை தற்போதைக்கு நிறுத்துவதாக ஊராட்சி செயலாளர்களின் மாநில மையம் அறிவித்துள்ளது.

Also Read  தொடர் மரணங்கள்- ஊராட்சி செயலாளர்களின் தொடரும் சோகம்

இறுதி இலக்கை எட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் பல வகையிலும் எடுப்போம் என்றார் மாநில தலைவர் ஜான்போஸ்கோபிராகாஷ்.