ஆளும் அரசு என்ன செய்யபோகிறது?
ஊராட்சி செயலாளர்களின் தொடர்காத்திருப்பு போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது.
பொருளாதார இழப்பு
குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ஊராட்சி செயலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.
ஒரு நபருக்கு குறைந்த பட்ச ஒரு நாள் செலவு என்று 300ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், 5000 பேர்களுக்கு 15,00,000 (பதினைந்து லட்சம்) ரூபாய் செலவு. மூன்று நாள் போராட்ட காலத்தில் 45இலட்சம் செலவு. அவர்களின் போக்குவரத்து செலவு தனி. ( இது குறைந்தபட்சமே,இதற்கும் அதிகமாகவே செலவாகி இருக்கும்)
உடல்நலம் பாதிப்பு
இதுவரை சென்னை காணாத வெயில் தகிதகிக்கிறது. குளிர்சாதன அறையில் கூட வேர்வை துளிகள் வெளிவருகிறது.
சூரியனின் சுட்டெரிக்கும் வெயிலில் பெண்கள் உட்பட ஐம்பது வயதை தாண்டிய ஊராட்சி செயலாளர்கள் உடல்நிலை பாதித்து வருகின்றனர். ஆளும் சூரிய அரசின் பார்வை தம்மீது படுமா என்பதே ஊராட்சி செயலாளர்களின் உள்ளத்து கேள்வியாக உள்ளது.
சாராய சாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்களின் பார்வை இவர்களின் பக்கம் கொஞ்சம் திரும்பட்டும்.
அப்போது தான் அது அனைவரிடமும் இவர்களின் கோரிக்கையை கொண்டு சேர்க்கும்.