ஒற்றை மனிதனுக்கு கட்டுப்பட்ட கூட்டம்

ஜான்போஸ்கோ பிரகாஷ்

ஜான்போஸ்கோபிரகாஷ்

ஊராட்சி செயலாளர்கள் பல்வேறு நியமான கோரிக்கைகளை வழியுறுத்தி தொடர்போராட்டத்தை அறிவித்து, பனகல் மாளிகை அருகில் பகலும் இரவும் போராடி வருகின்றனர்.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில்,மூன்றாவது நாளும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார் மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ்.

போராட்டத்தை கலைப்பது

மூன்றாம் நாள் போராட்டத்தின் போது பல அரசியல் தலைவர்கள் பனகல் மாளிகை வருவார்கள் என்பது உளவுத்துறை அறிக்கை.

அதனை நடைபெற விடக்கூடாது என்பதற்காக, காவல்துறையின் செயல்பாடு அரங்கேற துவங்கியது. போராட்டம் செய்யும் ஊராட்சி செயலாளர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் வேலையை காவல்துறை செய்தது. அதனை பயன்படுத்தி கூட்டத்தை கலைப்பது திட்டம்.

ஆனால்…மாநில தலைவரின் பேச்சிற்கு கட்டுப்பட்டு,ஆராயிரத்திற்கும் அதிகமான ஊராட்சி செயலாளர்கள் அமைதியாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

சபாஷ்

இந்த காலத்தில் ஒற்றை மனிதனின் வார்த்தைக்கு ஓரு இயக்கமே கட்டுப்பட்டது என்பது ஆச்சர்யமான வரலாறு ஆகும்.

சரக்கு மற்றும் பிரியாணியுடன் சம்பளம் வாங்கியே கூட்டம் சேர்க்கும் அரசியல்வாதிகள், இந்த ஊராட்சி செயலாளர்களின் ஒற்றுமையை பார்த்து ஆச்சர்யப்படுகின்றனர்.

ஊராட்சி செயலாளர்களின் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும். அதற்கு நமது இணைய செய்தி தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

 

Also Read  தொடர் மரணங்கள்- ஊராட்சி செயலாளர்களின் தொடரும் சோகம்