ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புவது எப்போது?

கிராம ஊராட்சி

தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்ப படாமல் இருக்கிறது.

ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி தலைவர் தலைமையில் உள்ள ஊராட்சி நிர்வாகமே நியமித்து வந்தது.

2019ல் அரசு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஊராட்சி செயலார் நியமனத்தை அரசே செய்தது.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அனைத்து நியமனங்களும் அரசு தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால்,ஊராட்சி செயலாளர்களின் நியமனத்தை ஊரக வளர்ச்சி துறையை நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது.

இந்த முடிவால், தகுதி உள்ள ஏழ்மையான நபர்களுக்கு வேலை கிடைப்பது நடக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வி தகுதி

ஊராட்சி செயலாளருக்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி என இதுவரை இருந்துள்ளது. ஆனால், ஊரக வளர்ச்சித்துறை படிப்படியாக கணிணி மயமாகி வரும் நிலையில் கல்வித் தகுதியை மாற்றி அமைக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணிணி தேர்வில் தேர்ச்சி என்பதை கட்டாயமாக்க வேண்டும். அப்போது தான் கணிணி மயமாகி வரும் ஊரக வளர்ச்சி முறையில் பணிபுரிவதற்கு சரியான வழி முறையாக இருக்கும்.

ஊராட்சி செயலாளர்கள் நியமன அறிவிப்பு விரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக துறையின் அதிகாரி நம்மிடம் தெரிவி்த்தார்.

Also Read  நடுப்பட்டி ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்

தமிழ் நாடு அரசு தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுப்பதே சரியான முடிவாக இருக்கும் என்பதே படித்த இளைஞர்களின் கருத்தாக உள்ளது.

அதேநேரத்தில், கல்வி தகுதியில் கண்டிப்பாக மாற்றத்தை கொண்டுவருவது மிக அவசியம் ஆகும்.

ஊராட்சி தலைவர் தலைமையிலான ஊராட்சி நிர்வாகத்திற்கே அதிகாரம் தொடரும் என அதிகாரி ஒருவர் இறுதியாக நம்மிடம் தெரிவித்தார்.