நத்தத்தில் யுத்தம் -அரசியல் சண்டையால் பாதிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள்

நத்தம்

திண்டுக்கல் மாவடத்தில் நத்தம் ஒன்றிய சேர்மனாக அதிமுக கட்சி சேர்ந்த கண்ணன் என்பவர் உள்ளார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உறவினர்.

சமீபத்தில் சில அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். இருந்தாலும்,ஒன்றிய பெருந்தலைவர் பதவியை திமுகவால் கைப்பற்ற முடியவில்லை.

ஆளும்கட்சி உறுப்பினர்கள் ஒருபக்கம், அதிமுக சேர்மன் மறுபக்கம் என அரசியல் விளையாட்டால் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட நான்கு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு தரப்பினர்கள் கோரிய பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கி உள்ளார். நிதி இல்லாமல் பணிகளை  ஒதுக்கப் பட்டது தான் பணியிடை நீக்கம் செய்யபட்டதற்கு காரணமாம்..

ஆனால்,,இதே நிலை தான் தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது.

ஆனால், நத்தம் ஒன்றியத்தில் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட பகைக்கு அதிகாரிகள் பலிகடவாக ஆக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையால், தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையில் பணி ஆணை வழங்கும் பணியை எந்த அதிகாரியும் செய்ய தயங்குவார்கள் என நம்மிடம் கூறினார் சங்கத்தின் முக்கிய நிர்வாகி.

 

Also Read  நூறுநாள் திட்ட ஊழலுக்கு யார் பொறுப்பு?