ஊராட்சி தேர்தல்
2019 டிசம்பரில் 27 மாவட்டங்களுக்கு ஊராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றது.அதன் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. ஆகவே, விரைவில் தேர்தல் வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர்.
இன்று திண்டுக்கல்லில் ஊரகவளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்துள்ள பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் கூறும்போது, பேரூராட்சி,நகராட்சி மற்றும் மாநகராட்சிகளோடு எந்தெந்த ஊராட்சிகளை இணைப்பது என்று எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. ஊராட்சிகளில் பதவி காலம் இருக்கும்போது இந்தப் பணிகளை செய்ய முடியாது. ஆகவே, எந்தெந்த ஊராட்சிகள் என்ற இறுதி முடிவுக்கு பிறகே ஊராட்சி தேர்தல் என்று சூசகமாக தேர்தல் தள்ளிப்போகும் என சொல்லாமல் சொல்லிவிட்டார்.
ஆக…ஊராட்சி பிரதிநிகளின் பதவி காலம் முடிந்த பிறகே, எந்தெந்த ஊராட்சிகள் இணைக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்படும். அந்தந்த முடிவு எடுப்பதற்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி மக்களின் கருத்து கேட்கப்பட்டு இறுதி முடிவு எடுப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகிவிடும்.
ஆகமொத்தம், ஊராட்சி மன்ற தேர்தல் தள்ளிப்போவது உறுதி.