ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப அவர்களை அந்த துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மனதார பாராட்டுகிறார்கள்.
நம்மிடம் பேசிய ஒரு மாவட்ட அதிகாரி கூறியதாவது, பணி ஓய்வு பெறுவதற்கு ஓராண்டே உள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வை தக்க நேரத்தில் அளித்துள்ளார் இயக்குநர். எங்கள் துறையில் பணிபுரிந்து வரும் பல அதிகாரிகள் அதனால் பலன் அடைந்துள்ளனர் என்றார்.
அதேவேளையில், குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட அதிகாரிகளாக பணியாற்றி வரும் ஏழு பேர்களுக்கு பதவி உயர்வுக்கான உத்தரவை இயக்குநர் அவர்கள் வெளியிடுவார் என நம்புகிறோம் என்றார் அந்த அதிகாரி.
இஆபவாக தேர்வு பெற்று ஊரக வளர்ச்சி துறையில் திட்ட இயக்குநராக பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக உள்ளது. அப்படிப்பட்டவர்களை துறை மாறுதல் செயதாலே, இந்த ஏழு பேருக்கான பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிடலாம்.
ஊரக வளர்ச்சித் துறையின் அடி முதல் நுணிவரை அனைத்தும் அறிந்துள்ள பொன்னையா இஆப அவர்கள் இந்த விடையத்தில் உடனடி நடவடிக்கை எடுத்திடுவார் என நாமும் நம்புகிறோம்.
அதுபோல, ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி,10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிவைக்க வேண்டிய உன்னத பொறுப்பும் பொன்னையா இஆப அவர்களுக்கு உள்ளது.
ஜோதிமுருகன், இணைய தள ஆசிரியர்