திருப்பத்தூர் தொகுதி முழுவதும் நிவாரண பொருட்கள் வழங்கி வரும் மருதுஅழகுராஜ்

சிவகங்கை மாவட்டம்

திருப்பத்தூர் ஜமாத்திற்கு உட்பட்ட 8 பள்ளிவாசல்களுக்கு 6 டன் அரிசியும்,

திருப்பத்தூர் பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கு 1.25 டன் அரிசியும், திருப்பத்தூர் பேரூராட்சி புதுத்தெருவில் உள்ள மக்களுக்கு 1.25 டன் அரிசியும் வழங்கினார்.

சிங்கம்புணரியில் உள்ள வலையபட்டி, கலுங்குபட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பை பட்டி, திருப்பதி பட்டி, இந்திரா நகர், வாகப்பட்டி, கச்சப்பட்டி, தோப்புபட்டி, லெட்சுமிபுரம், வையாபுரிபட்டி, முதலியான்பட்டி, மனவாக்கிபட்டி உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரிசி, பயறு, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் உள்ள உதிரப்பட்டி, மின்னல்குடிபட்டி, அப்பாகுடிபட்டி, நைனார்பட்டி, கும்மங்குடி, தென்கரை, வடுகபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரிசி, பயறு, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும் முக கவசமும் வழங்கினார் கவிஞரும்,பத்திரிகையாளருமான மருதுஅழகுராஜ்.

ஒரு தனிமனிதனாய் திருப்பத்தூர் தொகுதி முழுவதும் நிவாரண பொருட்கள் வழங்கி வரும் அவருக்கு நமது இணையத்தின் சார்பாக பாராட்டுக்கள்.

Also Read  வெள்ளிகட்டி ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்