தூய்மை பணியாளர்கள் என அரசாணை- கடைபிடிக்காத அரசுத்துறை

தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர் இனி தூய்மைப்பணியாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது..

அதாவது தமிழக சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் கடந்த மார்ச் 19-ந்தேதியன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல துறைகளில் தூய்மைப்பணிகளை துப்புரவு பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 

அவர்களின் செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அனைத்து துப்புரவுப்பணியாளர்களும் இனி தூய்மைப்பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து இது குறித்துஅரசுக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் கடிதம் எழுதினார் என்றும்..

மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் எழுதிய கடிதத்தில், பல்வேறு மாநகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும், அவர்களின் செயல்பாடுகளைக் கவுரவிக்கும் வகையிலும், முதல்-அமைச்சரின் அறிவிப்பின் அடிப்படையிலும், நகர்ப்புற மற்றும் ஊடக உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அனைத்து துப்புரவுப்பணியாளர்களை தூய்மைப்பணியாளர்கள் என்று அழைப்பதற்கு உரிய ஆணையை பிறப்பிக்க வேண்டுமென்று கோரியுள்ளார்.

அரசாணை
அரசாணை

அதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் துப்புரவுப்பணியாளர்களை தூய்மைப்பணியாளர்கள் என்று அழைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

Also Read  ஊராட்சி செயலாளர்கள் தொடர் போராட்டம் - சீமான் அறிக்கை

ஆனால் இன்றளவும் நமது செல்போன் மற்றும் தொலைபேசியில் கேட்கப்படும் (CALLER TONE) அழைப்பு ஒலியில் கொரோனா நோயாளியிடம் போராடுவதை விட…என்று ஆரம்பித்து காவலர்கள், மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவுசெய்யப்பட்ட அந்த ஒலிப்பதிவில் இன்றளவும் துப்புரவுத் தொழிலாளர்கள் என்று தான் அந்த ஒலிப்பதிவில் ஒலி வளம் வருகிறது.

 

கொரோனா நமக்கு கற்றுக்கொடுத்த சிறந்த பாடம் “தூய்மை காவலர்களே… நமது முதன்மைப் பணியாளர்கள் என்பது தான் என்றால் மிகையாகாது..

பொது இடங்களில் தூய்மையை பேணுவது, புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களின்போது தூய்மைப்பணிகளை மேற்கொள்வது, தெருக்கள், சந்தைகள், பேருந்து நிலையங்கள், ஆலயங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் சுகாதாரம் என்று மக்களின் நலனை பேணி வருகின்ற அந்த காவலர்களை நாம் முதன்மைப்படுத்தி அவர்களுக்கான கௌரவத்தை தந்து போற்றி புகழ வேண்டும்…!

கடந்த மார்ச் 19ஆம் தேதி பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த, தூய்மைப் பணியாளர்கள் என்ற ஒரு வார்த்தை ஒலிப்பதிவை மாற்றியமைத்து செயல்படுத்த இவ்வளவு காலம் தாமதம் ஆவதா..?என்று நினைத்து நாம் வியப்படைந்து….

ஜான்போஸ்கோ பிரகாஷ்

இது குறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்
ஜான் போஸ்கோ பிரகாஷ், தனது கருத்தை பதிவு செய்ததாவது:-

Also Read  மே 3- உலக பத்திரிகை சுதந்திர தினம்

இதுஅந்த முதன்மை பணியாற்றினார்களுக்கு கிடைத்த கவுரவம்.
அந்த கௌரவத்தை வழங்கிய முதல்வருக்கு எங்களது சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் அவர்களது நீண்ட காலமாக அடிப்படை கோரிக்கையை நிறைவேற்றினால் அவர்களுக்கு கௌரவம் சேர்த்தது போல் ஆகும்.
தற்போது தான் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன் அடிப்படையில் கூடிய விரைவில் நீங்கள் குறிப்பிட்டு செல்போன் அழைப்பு ஒலி(CALLER TONE) கண்டிப்பாக மாற்றப்படும் என்று நம்மிடம் தெரிவித்தார்..

தர்மபுரி க.கிருஷ்ணன்
தர்மபுரி க.கிருஷ்ணன்

தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர்கள் தூய்மை காவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தருமபுரி கிருஷ்ணகிரிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது…

துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என்று மாண்புமிகு முதல்வர் கௌரவப்படுத்தியமைக்கு நன்றியை நாங்கள் முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்….

எங்களின் நீண்ட நாள் கோரிக்கை, இது மட்டுமல்ல..
எங்களது நீண்ட நாள் அடிப்படையான கோரிக்கை எங்களுக்கு அரசு பணி நிரந்தரம் வேண்டும்…
எங்களுக்கு உரிய சமூக பாதுகாப்பு வேண்டும்….

அதேபோல் நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களையும், தூய்மைப் பணியாளர்களையும், தூய்மை காவலர்களையும், ஒரே மாதிரியான அரசு பணியாளர் என்ற வரை முறை திட்டத்தின் கீழ் அமல்படுத்த வேண்டும் என்பதே… என்றார்.