மக்களுக்கான செய்தியை வெளியிடுவதே உண்மையான ஊடக தர்மம்.
எவருக்கும் பயப்படாமல் உண்மை செய்தியை வெளியிடுவதே ஊடக சுதந்திரம்.
நமது இணைய செய்தி தளம், மக்களுக்கான ஊடகமாகவே எந்நாளும் பயணிக்கும்..
அதன் செயல்பாடுகளில் ஒரு துளியாக…உரிமைக்காக போராடும் ஊராட்சி செயலாளர்களின் உண்மை நிலை அரசிற்கு உரக்க சொல்வதோடு மட்டுமல்லாது, நமது இணைய தள ஆலோசகரும், மூத்த பத்திரிகையாளருமான தராசு ஷ்யாம் அவர்கள் முன்னனி காட்சி ஊடகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை பற்றி பேசி உள்ளார்.
நியூஸ்7 தொலைக்காட்சியில் இன்றைய கேள்வி நேரம்(02-05-23) நிகழ்ச்சியில் நமது இணைய தள ஆலோசகரும்,மூத்த பத்திரியாளருமான தராசு ஷ்யாம் அவர்கள், ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவித்துள்ள தொடர் காத்திருப்பு போராட்டத்தை பற்றி பேசி உள்ளார்.
உங்களின் போரட்டத்திற்கு எங்கள் இணைய தளம் சார்பாக சிறிய பங்களிப்பு.
உங்களின் பிரச்சனையை முதல்வர் வரை நேரடியாக கொண்டு செல்வதாக நம்மிடம் உறுதி அளித்துள்ளார் தராசு ஷ்யாம் அவர்கள்.
அனபுடன்…
ஜோதிமுருகன்,
ஆசிரியர்,