நமது இணைய தள ஆலோசகர் தேர்தலில் வெற்றி

அழகன் தமிழ்மணி

தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.

2023-26 ஆண்டுக்கான தேர்தல் ஏப்ரல் 30ம் தேதி நீதிமன்றம் நியமித்த மேற்பார்வையாளர் கண்காணிப்பில் நடந்தது.

இராமசாமி இராமநாராயணன் (எ) முரளி தலைமையில் நலம் காக்கும் அணியும், மன்னன் தலைமையில் உரிமை காக்கும் அணியும் கடுமையாக போட்டி போட்டனர். மூன்றாவதாக,ஓயாத அலைகள் என்ற அணியும் களத்தில் குதித்தனர்.

மே 1 அன்று வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இராமசாமி (எ) முரளி தலைமையில் ஆன நலம் காக்கும் அணியினர் வெற்றி பெற்றனர்.

26 செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை பாதி அளவில் எண்ணப்பட்ட நிலையில் மறுநாள் எண்ணப்படும் என தேர்தல் கண்காணிப்பளாரான ஓய்வு பெற்ற நீதிபதி அறிவித்தார்.

அதன்படி மே 2 ம் தேதி காலை 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது.

26 செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக நமது இணைய தள ஆலோசகரும்,அன்புள்ள ரஜினிகாந்த்,சோலைக்குயில்,தர்மபத்தினி போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த அழகன் தமிழ்மணியும் நலம் காக்கும் அணி சார்பாக போட்டியிட்டார்.

ஆசிரியர் பக்கம்

வாக்கு எண்ணிக்கை முடிவில், பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Also Read  கொரொனா-கவர்னரின் நேரடி கள ஆய்வு எப்போது

அவரின் திரை உலக பணி சிறக்க நமது இணைய தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.